இத்தாலி நாட்டின் வரீஸ் மாகாணம் மொராசோனின் கம்யூன் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் பைடோனி. இவரது மனைவி விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
இதனால் இருவரும் தனித்தனியாக வாழ்த்து வருகிறார்கள். இந்த தம்பதிகளின் ஏழு வயது சிறுவன் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். மேலும் நண்பர் ஒருவரைக் கத்தியால் குத்திய வழக்கில் டேவிட் பைடோனி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனது மகனுடன் புத்தாண்டு கொண்டாட விரும்புகிறேன் என டேவிட் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து சிறுவன் தனது தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது வீட்டிற்கு வந்த மகனை டேவிட் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் மனைவியின் வீட்டிற்குச் சென்று மகனை அழைத்து வந்துள்ளதாக கூறி அவரையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து போலிஸார் தலைமறைவாக இருந்த டேவிட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.