உலகம்

அதிகமாக சாப்பிட்டதால் நஞ்சான மருந்து... 20 ஆண்டுகளில் 10 லட்சம் பேர் உயிரிழப்பு: அமெரிக்காவில் அதிர்ச்சி!

அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் அளவுக்கு அதிகமாக மருந்து எடுத்துக்கொண்டதால் 9 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகமாக சாப்பிட்டதால் நஞ்சான மருந்து... 20 ஆண்டுகளில் 10 லட்சம் பேர் உயிரிழப்பு: அமெரிக்காவில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவில் கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை அதிக அளவு மருந்து எடுத்துக் கொண்டதால் 9 லட்சத்து 32 ஆயிரத்து 364 பேர் உயிரிழந்துள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் 20 ஆண்டுகளில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையோரே அதிகமாக உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் அமெரிக்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனா மரணங்களைக் காட்டிலும் இது அதிகமாகும். அதாவது அமெரிக்காவில் 8 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆனால், அதிகமாக மருந்து உட்கொண்டவர்களில் 9 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2021ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும். இதனால் மருந்துகளை அளவுக்கு அதிகம் எடுத்துக் கொண்டதன் விளைவாக 10 லட்சம் பேர் உயிரிழந்திருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories