மேரிலேண்ட் பகுதியைச் சேர்ந்த வீட்டின் உரிமையாளர் ஒருவர் தனது வீட்டில் புகுந்து தொடர் தொல்லை கொடுத்து வந்த பாம்பு ஒன்றினை விரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
ஆனால் அந்த பாம்பு எதற்கும் அசராததால் அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார். வாடகைக்கு வந்தவர்களையும் அந்த பாம்பு விட்டப்பாடில்லை. இதனால் மீண்டும் பாம்பை விரட்ட பல வழிகளில் முயற்சித்தும் அந்த வீட்டின் உரிமையாளருக்கு எதுவும் கைக்கொடுக்கவில்லை.
இதனையடுத்து நெருப்பு புகையை செலுத்தினால் பாம்பு ஓடிவிடும் என்பதை அறிந்த அவர், அந்த வீட்டில் நிலக்கரிகளை வாங்கி குவித்திருக்கிறார். பின்னர் அந்த தீ மூட்டி புகையை ஏற்படுத்தியிருக்கிறார்.
இதன் காரணமாக அந்த வீட்டின் கீழ் தளத்தில் இருந்து சுவர், படிக்கட்டிகள் வழியாக மொத்த வீட்டுக்கும் தீ பரவியிருக்கிறது. இதன் காரணமாக ஒரு மில்லியன் டாலர் (7.54 கோடி ரூபாய்) மதிப்பிலான வீடு முழுவதும் தீக்கிரையாகியுள்ளது.
இந்த தீ விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் அந்த பாம்பு வெளியேறியதா இல்லையா என்று இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை. இருப்பினும் பாம்பின் தோல்களை அக்கம்பக்கத்தினர் கண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.