உலகம் முழுவதும் ஆம்புலன்ஸ் வாகன சேவை அத்தியாவசிய சேவையாக பார்க்கப்படுகிறது. இதனால் ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூடுதல் பாதுகாப்போடு அனுப்பி வைக்க அரசு நிர்வாகம் மற்றும் போக்குவரத்து போலிஸார் சார்பில் பல்வேறு முக்கிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்கு பயன்படும் ஆம்புலன்ஸ் விவகாரங்களில் இதுவரை எந்தவித வேடிக்கை சம்பவங்களும் நடந்ததாக கேள்விப்பட்டிருக்க மட்டோம். அப்படி இருக்கையில், தைவானைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் தனது சொந்த தேவைக்காக ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் பகுதியைச் சேர்ந்த வாங் என்ற முதியவர் ஒருவர், சூப்பர் மார்க்கெட் சொல்லவது தொடங்கி வீட்டுத் தேவைக்காக செல்வது வரை அனைத்து போக்குவரத்து தேவைக்கும் இலவச ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
வாங்-கின் வீடு அரசு மருத்துவமனை அருகே உள்ளதாக கூறப்படுகிறது. அவர் அப்பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், அடிக்கடி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை வளாகத்திற்கு வரும் வாங், மருத்துவரை பார்க்காமலேயே வெளியே சென்றுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், வாங்-கை தொடர்ச்சியாக கண்காணித்து வந்துள்ளனர். இதனிடையே வாங் கடைசியாக வந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போதும் அப்போதும் அதேபோல் நடந்துள்ளது.
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் ஒன்றை அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலிஸார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், கடந்த ஒருவருடத்தில் மட்டும், 39 முறை ஆம்புலன்ஸ் சேவையை இதுபோன்று வாங் பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து போலிஸார் அவரை அழைத்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து போலிஸார் இனிமேல் இதுபோல் செய்தால் சிறையில் அடைத்துவிடுவதாக எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.