உலகம்

Facebook பார்த்தால் ‘பளார்’... அறைவதற்கு ஆள் வைத்து சம்பளம் கொடுத்த CEO... இது என்ன கதை தெரியுமா?

ஃபேஸ்புக் பார்த்தால் தன்னை கன்னத்தில் அறைவதற்காக பெண் ஒருவரை வேலைக்கு அமர்த்திய இந்திய அமெரிக்கரின் செயல் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Facebook பார்த்தால் ‘பளார்’... அறைவதற்கு ஆள் வைத்து சம்பளம் கொடுத்த CEO... இது என்ன கதை தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஃபேஸ்புக் பார்த்தால் தன்னை கன்னத்தில் அறைவதற்காக பெண் ஒருவரை வேலைக்கு அமர்த்திய இந்திய அமெரிக்கரின் செயல் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மூழ்கியிருப்பதால் இளைஞர்களின் வேலைத்திறன், மனநலம், எதிர்காலம் உள்ளிட்டவை பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் PAVLOK ஃபிட்னெஸ் பேண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கருமான மனீஷ் சேத்தி, தான் அதிகமாக ஃபேஸ்புக் பார்க்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.

இதற்காக தான் ஃபேஸ்புக் பார்க்கும் போதெல்லாம் கன்னத்தில் ‘பளார்’ என அறைவதற்காக 8 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 600 ஊதியத்தில் பெண் ஒருவரை பணியில் அமர்த்தியுள்ளார்.

மணீஷ் சேத்தி, ஃபேஸ்புக் பயன்படுத்தும் போதெல்லாம் அவரை அறைவதுதான் அப்பெண்ணின் வேலை. அதற்காகவே தனது இருக்கைக்கு அருகில் அந்த பெண்ணுக்கும் இருக்கை கொடுத்துள்ளார்.

இந்த விஷயம் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்தது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்குப் பின்னர் அவரது வேலையில் கவனம் அதிகரித்து, அவரது நிறுவனம் வெகுவாக வளர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்போது மணீஷ் ஃபேஸ்புக் பயன்படுத்துவதைப் பார்த்த அந்தப் பெண் அறை விடுவது குறித்த பதிவு வைரலாகி வருகிறது. அதற்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ரியாக்ட் செய்துள்ளார்.

banner

Related Stories

Related Stories