உலகம்

'META' பெயர் மாற்றத்திற்கு என்ன காரணம் - மார்க் சொல்லும் சூசக பதில்?

facebook பெயர் meta என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

'META' பெயர் மாற்றத்திற்கு என்ன காரணம் - மார்க் சொல்லும் சூசக பதில்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகின் முன்னணி சமூக வலைத்தளமான facebookக்கை பலகோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக facebook பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.

சமீபத்தில் கூடfacebook, whatsapp, instagram ஆகிய மூன்று தளங்களும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 6 மணி நேரம் முடங்கியது. பின்னர் இந்த பிரச்சனையை ஃபேஸ்புக் சரி செய்தது.

பின்னர் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு facebookக்கின் பெயரை மாற்ற அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளதாக The Verge என்ற இதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், Meta என facebook பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

'META' பெயர் மாற்றத்திற்கு என்ன காரணம் - மார்க் சொல்லும் சூசக பதில்?

இது குறித்து நேற்று மார்க் ஸுகர்பெர்க் கூறுகையில், facebook நிறுவனத்தின் பெயர் ரீபிராண்ட் செய்யப்பட்டு, Meta பிளாட்ஃபார்ம் என்று அழைக்கப்படும். அதாவது சுருக்கமாக Meta என்று அழைக்கப்படும்.

Metaverse என்பது மெய்நிகர் சூழல். அதற்குள் நீங்கள் சென்று வெறும் திரையைப் பார்ப்பதற்குப் பதிலாக மெய் நிகர் உபகரணங்களான ஹெட்மசெட், ரியாலிட்டி கிளாஸ், ஸ்மார்ட்ஃபோன் ஆப், உள்ளி்ட்ட பல உபகரணங்கள் மூலம் மக்களுடன் சந்திக்கலாம், உரையாடலாம், விளையாடலாம். அடுத்த 10 ஆண்டுகளில் மெட்டாவெர்ஸ் 100 கோடி மக்களைச் சென்றடையும் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories