உலகம்

"அழுதது ஒரு குத்தமா... இதுக்கு கூடவா பில்லு?" : மருத்துவமனை கட்டணத்தால் அதிர்ச்சியடைந்த நோயாளி!

அமெரிக்காவில் அறுவை சிகிச்சையின்போது அழுததற்காக, பெண் ஒருவருக்கு தனியார் மருத்துவமனை கட்டணம் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"அழுதது ஒரு குத்தமா... இதுக்கு கூடவா பில்லு?" : மருத்துவமனை கட்டணத்தால் அதிர்ச்சியடைந்த நோயாளி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அறுவை சிகிச்சை என்றாலே பொதுவாக நோயாளிகளுக்குச் சிறு அச்சமும், பதட்டமும் இருக்கும். மேலும் அறுவை சிகிச்சையை நினைத்து அழவும் செய்வார்கள். இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு முன்பு நோயாளி ஒருவர் அழுததற்காக அவருக்குத் தனியார் மருத்துவமனை கட்டணம் வசூலித்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் மிட்ச். இவர் அறுவை சிகிச்சை செய்து மச்சத்தை அகற்றுவதற்காகத் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதையடுத்து அறுவை சிகிச்சைக்கு முன்னர் மிட்ச் எமோஷனலாக இருந்துள்ளார். மேலும் ஒருகட்டத்தில் அழவும் செய்துள்ளார்.

பின்னர் இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து இவரை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்தனர். அப்போது மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ சிகிச்சைக்கான கட்டண ரசீதை கொடுத்துள்ளது.

இந்த பில்லை பார்த்து மிட்ச் அதிர்ச்சியடைந்துள்ளார். இதற்குக் காரணம் அறுவை சிகிச்சையின்போது அழுததற்காக அவருக்குக் கட்டணம் செலுத்துமாறு குறிப்பிட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அந்த பில்லில் மச்சத்தை அகற்றுவதற்காக 223 டாலர்கள் கட்டணம் என்றும், Briefing emotion-க்காக 11 டாலர்கள் கட்டணம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து தனியார் மருத்துவமனை அளித்த கட்டண ரசீதை மிட்ச் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பில் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பலரும் மருத்துவமனை நிர்வாகத்திற்குக் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories