உலகம்

விரைவில் மற்றொரு தடுப்பூசி..? : மிரட்டும் நிபா வைரஸ்.. தடுப்பூசி கண்டுபிடிப்பில் வெற்றி கண்ட விஞ்ஞானிகள்!

நிபா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

விரைவில் மற்றொரு தடுப்பூசி..? : மிரட்டும் நிபா வைரஸ்.. தடுப்பூசி கண்டுபிடிப்பில் வெற்றி கண்ட விஞ்ஞானிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவின் கேரளாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு நிபா வைரஸ் பரவியது. அப்போது 17 பேர் உயிரிழந்தனர். இப்போது நிபா வைரஸால் 12 வயது சிறுவன் பலியாகி உள்ளான். மேலும் பலர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

உயிர்க்கொல்லி நோயான நிபா வைரஸ் மேலும் பரவி விடாமல் தடுக்க, கேரளாவில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நிபா வைரஸை கட்டுப்படுத்த, இதுவரை மருந்துகள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தடுப்பூசி மருந்தை ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர். இந்த மருந்துக்கு 'சாட் ஆக்ஸ்&1' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஜென்னர் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அமெரிக்க தேசிய சுகாதார மையம் ஆகியவை இணைந்து நிபா தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

வைரசின் மரபணுவை பகுத்தாய்வு செய்து அதன் மூலம் இந்த தடுப்பூசி மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. அதை, 8 வகையான குரங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்ததில் மருந்து நன்றாக வேலை செய்வது தெரியவந்தது.

ஆப்ரிக்க பச்சை வகை குரங்கின் வைரஸை இந்த தடுப்பூசி முழுமையாக அழிப்பதாக கூறப்பட்டுள்ளது. சிரியா ஹேம்ஸ்டர் என்ற எலிக்கு நடத்தப்பட்ட சோதனையிலும் தடுப்பூசி வெற்றிகரமாக வேலை செய்துள்ளது.

இன்னும் பலகட்ட சோதனைகள் நடைபெற இருக்கும் நிலையில் அவற்றிலும் வெற்றி கிடைத்தால் விரைவில் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories