அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளினால் உலகம் அணு ஆயுதப் போரின் பேரழிவின் நிழலில் வாழ்ந்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழித்தல் உலக தினத்தை முன்னிட்டு நேற்று (அக்.,2) நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட கூட்டத்தில் பேசிய ஆண்டனியோ கட்டரஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளிடையே தொடரும் பகைமை மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக அத்தகைய நாடுகள் அந்த அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான பணிகளை ஈடுபடுவதில்லை என யோசிக்க வைக்கிறது.
அணு ஆயுதங்களை நவீனப்படுத்துதலால் அதன் தர அளவிலான ஆயுதப் போட்டிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அணு ஆயுத பெருக்கத் தடை தொடர்பான ஒப்பந்தம் 50 வது ஆண்டை எட்டுகிறது. அணு ஆயுதக் குறைப்பையும் பரவலையும் தடுக்க இது முக்கியமானதாகும் என ஆண்டனியோ குறிப்பிட்டுள்ளார்.