உலகம்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தங்கை மாயம் - கொல்லப்பட்டாரா எனக் கிளம்பும் சந்தேகம்!

சமீபத்தில் வெளியிடப்பட்ட கிம் ஜாங் உன்னின் புகைப்படத்தில் அவருக்கு அருகில் அவரது தங்கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தங்கை மாயம் - கொல்லப்பட்டாரா எனக் கிளம்பும் சந்தேகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் பொது வெளியில் தோன்றி பல நாட்கள் ஆவதால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பிள்ளது.

சமீபத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை சரியில்லாமல் கோமா நிலைக்கு சென்றுள்ளார் எனவும், இதனால் அவரது சகோதரி கிம் யோ ஜாங் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகத் தொடங்கின. ஆனால் அதன் பின் அரசு அதிகாரிகளுடன் கிம் ஜாங் உன் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருக்கும் புகைப்படத்தை வடகொரிய அரசாங்கம் வெளியிட்டது.

இந்த வதந்திகளைப் பொய்யாக்கும் வகையில் பொதுவெளியில் ஜாங் தோன்றாமல் இருக்கிறார் எனவும் தென் கொரிய செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. ஒரு மாதத்துக்கு முன்பாக அரசு விழா ஒன்றில் அவரது சகோதரருடன் கிம் யோ ஜாங் தோன்றினார்.

இதற்கு முன்பாக யாராவது அதிபருக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் எனக் குறிப்பிடப்பட்டால் உடனே அவரது பதவி பறிக்கப்படும் அல்லது அவர் மரணமடைவார் என்பதே வரலாறு. கிம் ஜாங் உன்னின் சகோதரரும் வட கொரிய அதிபர் நாற்காலிக்கு போட்டியாகக் கருதப்பட்டவருமானவர் பல ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

சமீபத்தில் வெளியிட்டுள்ள கிம் ஜாங் உன்னின் புகைப்படத்தில் அவருக்கு அருகில் அவரது தங்கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எந்த அதிகாரப்பூர்வ புகைப்படங்களிலும் சமீபகாலமாக அவர் இடம்பெறவில்லை என்பது சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

banner

Related Stories

Related Stories