உலகம்

ஒரு வாரமாக எரியும் காட்டுத்தீ : 10 லட்சம் ஏக்கர் நிலம் நாசம்... 1000 குடும்பத்தினர் வெளியேற்றம்!

கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் சுமார் 10 லட்சம் ஏக்கர் நிலமும் 700க்கும் மேற்பட்ட வீடுகளும் சாம்பலாகியுள்ளனன.

ஒரு வாரமாக எரியும் காட்டுத்தீ : 10 லட்சம் ஏக்கர் நிலம் நாசம்... 1000 குடும்பத்தினர் வெளியேற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் சுமார் 10 லட்சம் ஏக்கர் நிலமும் 700க்கும் மேற்பட்ட வீடுகளும் சாம்பலாகியுள்ளனன.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் கடந்த ஒரு வாரமாக எரிந்து வரும் காட்டுத் தீயால் சுமார் 10 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்து சாம்பலாக்கியுள்ளது. இந்த காட்டுத்தீயில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 700க்கும் மேற்பட்ட வீடுகள் சாம்பலாகியுள்ளனன. ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

தீயணைப்பு வீரர்களும், இராணுவத்தினரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். சான்பிரான்சிஸ்கோ குடாப் பகுதியில் அதிதீவிர காட்டுத்தீ எச்சரிக்கையை அமெரிக்க தேசீய வானிலை சேவை மையம் விடுத்துள்ளது.

ஒரு வாரமாக எரியும் காட்டுத்தீ : 10 லட்சம் ஏக்கர் நிலம் நாசம்... 1000 குடும்பத்தினர் வெளியேற்றம்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பேரிடர் தீர்மானம் ஒன்றை வெளியிட்டு அரசு உதவி அளிக்க முடிவெடுத்துள்ளார். இதன் மூலம் வீடிழந்தோருக்கு வீடு, மன அழுத்தங்களுக்கு ஆளோனோருக்கு கவன்சிலிங் உள்ளிட்ட உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories