உலகம்

“இந்தியாவுக்கு மிகப்பெரிய பிரச்சினை உள்ளது” : ட்ரம்பின் விமர்சனத்திற்கு பிரதமர் மோடி பதில் கொடுப்பாரா?

இந்தியாவில் வைரஸ் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவுக்கு மிகப்பெரிய பிரச்சினை உள்ளது” : ட்ரம்பின் விமர்சனத்திற்கு பிரதமர் மோடி பதில் கொடுப்பாரா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது.

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1 8,471,207 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 697,955 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். குறிப்பாக வல்லரசு அமெரிக்கா கொரோனாவைக் கட்டுபடுத்துவதில் தோல்வியடைந்து உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 4,862,513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 158,968 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவிற்கு அடுத்த படியாக பிரேசிலில் 2,751,665 பேர் பாதிக்கப்படுள்ளனர். மேலும் 94,702 பேர் உயிரிழந்துள்ளனர்.

“இந்தியாவுக்கு மிகப்பெரிய பிரச்சினை உள்ளது” : ட்ரம்பின் விமர்சனத்திற்கு பிரதமர் மோடி பதில் கொடுப்பாரா?

அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தப்படியாக இந்தியா உள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,861,821 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 39,044 ஆக உயர்ந்துள்ளது.

மூன்று நாடுகளிலுமே அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பயன்தராத நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தங்கள் நாட்டில் மட்டும்தான் கொரோனா பிரச்சனையை சிறப்பாக கையாள்வதாகவும், இந்தியாவில் வைரஸ் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், கொரோனா பிரச்சனையைக் கையாள்வதில் அமெரிக்கா மற்ற பெரிய நாடுகளைவிட சிறப்பாக செயல்படுகிறது. சீனா - இந்தியாவை விட அமெரிக்காவும் மிகப் பெரிய நாடு என்பதனை மறந்துவிட வேண்டாம். சீனாவில் வைரஸ் பாதிப்பு இப்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் வைரஸ் பாதிப்பு மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்த விமர்சனத்திற்கு பிரதமர் மோடி பதலளிப்பாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories