உலகம்

“இதுவே உங்களது கடைசி வேலை நாள்” : கொரோனா பாதிப்பைக் காரணம் காட்டி 3,500 ஊழியர்கள் பணி நீக்கம்!

கொரோனா பாதிப்பைக் காரணம் காட்டி உபர் நிறுவனம் தனது ஊழியர்கள் 3,500 பேரை பணி நீக்கம் செய்துள்ளது.

“இதுவே உங்களது கடைசி வேலை நாள்” : கொரோனா பாதிப்பைக் காரணம் காட்டி 3,500 ஊழியர்கள் பணி நீக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா பாதிப்பால் உலகம் பெரும் பெருளாதார நெருக்கடியை சந்தித்துவருகிறது. குறிப்பாக சிறு குறு நிறுவனங்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை கடும் இழப்பை சந்திக்கின்றனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பை காரணம் காட்டி பல முண்ணனி நிறுவனங்கள் சம்பளம் குறைப்பு ஆட்குறைப்பு, பணி நீக்கம் என இறங்கியுள்ளனர். அந்தவகையில், பிரபல கால்டாக்சி நிறுவனமான உபர் தனது ஊழியர்கள் 3,500 பேரை ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அறிவித்த உபர் நிறுவனம் வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றியவர்களை தற்போது பணி நீக்கம் செய்துள்ளது. இதற்காக நேற்றைய தினம் அலுவலக நேரத்தில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் உள்ள 3,500 ஊழியர்களை மூன்றே நிமிட வீடியோ காலில் பணி நீக்கம் செய்தது.

அந்த வீடியோவில் பேசிய, உபர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ருவ்வின், “கொரோனா பேரிடரை சமாளிக்காவுக், இழப்பிட்டை சரி செய்யவும் உபர் நிறுவனம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி எடுக்கப்பட்ட முதற்கட்ட நடவடிக்கையாக இதுவே உங்களது கடைசி வேலை நாள். இந்நிறுவனத்தில் இனி உங்கள் அனைவருக்கான வேலை இல்லை. மேலும் சில முக்கிய அதிகாரிகள் தனது அடிப்படை ஊதியத்தை பெறப்போவதில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் தற்போது பணியாற்றிய ஊழியர்களில் இருந்து ஒரே நேரத்தில் 14 சதவீத ஊழியர்கள நீக்கியது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. உபர் நிறுவனத்தின் இந்த செயலால் பல்வேறு நிறுவன ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories