உலகம்

"கோடிகோடியாகப் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்” - கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் நாடுகள்! #Emergency

வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால், பாகிஸ்தான், சோமாலியா உள்ளிட்ட நாடுகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

"கோடிகோடியாகப் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்” - கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் நாடுகள்! #Emergency
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக விவசாயப் பயிர்கள் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருவதால் பாகிஸ்தான், சோமாலியா உள்ளிட்ட நாடுகள் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளன.

பாகிஸ்தான் நாட்டின் தெற்கு மாகாணமாக சிந்து முதல் வடகிழக்கு மாகாணமாக கைபர் பக்துவா வரையிலான பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கோதுமை உள்ளிட்ட பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகின்றன.

இதுவரை இல்லாத அளவுக்கு பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருவதால் லட்சக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால், அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

"கோடிகோடியாகப் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்” - கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் நாடுகள்! #Emergency

முன்னதாக, வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால், சோமாலியா நாட்டிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. சோமாலியா உள்ளிட்ட ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் வெகுவாக அதிகரித்து, விளைபயிர்கள் சேதமடைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெட்டுக்கிளிகளை சிறிய ரக விமானங்கள் மூலம், பூச்சிமருந்து தெளித்து விரட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும், வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

"கோடிகோடியாகப் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்” - கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் நாடுகள்! #Emergency

சமீபத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காப்பான்’ படத்தில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் குறித்த காட்சி இடம்பெறும். அதில் கார்ப்பரேட் வில்லன் வெட்டுக்கிளிகளை வளர்த்து வேளாண் சாகுபடியை நாசமாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அதேபோன்று இந்த வெட்டுக்கிளி தாக்குதலுக்கும் பின்னணி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

உலக நாடுகள் ஒன்றிணைந்து வெட்டுக்கிளிகள் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர். இல்லையெனில், வெட்டுக்கிளிகள் மிக விரைவாக பல மடங்கு பெருகும் ஆபத்து உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories