உலகம்

ஆஸ்கர் ரெட் கார்ப்பெட் நிகழ்வை புறக்கணித்தது ஏன்? - சீன நிறுவனத்தின் உருக்கமான விளக்கம்!

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் விதமாக ஆஸ்கர் நிகழ்வை புறக்கணித்துள்ளதாக சீன நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆஸ்கர் ரெட் கார்ப்பெட் நிகழ்வை புறக்கணித்தது ஏன்? - சீன நிறுவனத்தின் உருக்கமான விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸின் பாதிப்பு சீனா மட்டுமல்லாமல் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரையில் சீனா நீங்கலாக 18 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் மட்டும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 213 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உலக சுகாதார நிறுவனம் சர்வதேச மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. இந்நிலையில், துயரத்திலும், சீனாவின் தொலைக்காட்சி நிறுவனம் CCTV மனிதாபிமான அடிப்படையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆஸ்கர் ரெட் கார்ப்பெட் நிகழ்வை புறக்கணித்தது ஏன்? - சீன நிறுவனத்தின் உருக்கமான விளக்கம்!

அது என்னவெனில், வருகிற பிப்ரவரி 9ம் தேதி நடக்கவிருக்கும் 92வது ஆஸ்கர் விருது விழாவின் ரெட் கார்ப்பெட் நிகழ்வில் சீனா பங்கேற்கப் போவதில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக சீனாவை சேர்ந்த எவரும் வெளியே செல்வதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆஸ்கர் விழாவுக்குச் செல்வதன் மூலம் எவருக்கும் இந்த பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதாலேயே இந்த அறிவிப்பு எடுக்கப்பட்டுள்ளது என சீனா சென்ட்ரல் டெலிவிஷன் (CCTV) தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories