உலகம்

ஈரான் – அமெரிக்கா மோதல் தொடங்கிய வரலாறு : ஈரான் இராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பின்னணி என்ன?

ஈரானில் ஷியா மதத் தலைநகரமாக கருதப்படும் கோம் நகரில் உள்ள ஜாம்கரண் மசூதியின் உச்சியில் போர்ப் பிரகடனமாகக் கருதப்படும் செங்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

ஈரான் – அமெரிக்கா மோதல் தொடங்கிய வரலாறு : ஈரான் இராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தி, ஈரான் இராணுவ தளபதியைக் கொன்றதற்குப் பின்னணி என்ன?

2018 - ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது:

கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்தது. மேலும் இந்த ஒப்பந்தத்தில் தொடரவேண்டும் என்றால் நாங்கள் வைக்கும் கோரிக்கைக்கு உடன்படவேண்டும் எனவும் தெரிவித்தார் ட்ரம்ப்.

அதன்பின்னர் அமெரிக்கா விதித்த இந்த கோரிக்கையை ஏற்கமாட்டோம் என்றும், அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிடுவது வரலாற்றுத் தவறு என்றும் ஈரான் எச்சரித்தது.

ஈரான் – அமெரிக்கா மோதல் தொடங்கிய வரலாறு : ஈரான் இராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பின்னணி என்ன?

முதல் தடை:

2018 ஆகஸ்ட் 7 ம் தேதி அமெரிக்கா ஈரான் மீதான முதல் சுற்றுத் தடைகளை கொண்டுவந்தது. அதன்படி, விமானப் போக்குவரத்து மற்றும் தரைவிரிப்புகள் முதல் பிஸ்தா மற்றும் தங்கம் வரை பல வணிகத் துறைகளுடன் வர்த்தகத்தை அமெரிக்கா தடை செய்தது.

அதையடுத்து நவம்பர் 5ம் தேதி முக்கிய எண்ணெய் மற்றும் வங்கித்துறைகளுக்கு குறிவைத்து தடைவித்தது.

ஏப்ரல் 8 : ஈரான் ராணுவத்தை "பயங்கரவாத" அமைப்பாக அறிவித்த ட்ரம்ப்!

ஈரான் இராணுவம் சக்திவாய்ந்த படை நியமித்திருப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். அது ஒரு வெளிநாட்டு "பயங்கரவாத" அமைப்பாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) என அழைத்தார். மேலும், ஏப்ரல் 15-ம் முதல் ஐ.ஆர்.ஜி.சி மீது பரந்த பொருளாதார தடை மற்றும் பயணத் தடைகளை விதித்து ட்ரம்ப் அறிவித்தார்.

ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலளித்த ஈரான் உடனடியாக அமெரிக்காவை "பயங்கரவாத ஆதரவு அரசு" என்று அறிவித்தது. வாஷிங்டனில் உள்ள படைகளை "பயங்கரவாத குழுக்கள்" என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி அழைத்தார்.

ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியது.

ஈரான் – அமெரிக்கா மோதல் தொடங்கிய வரலாறு : ஈரான் இராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பின்னணி என்ன?

அமெரிக்கா ஈரானிய ஆட்சியுடன் போரை நாடவில்லை, ஆனால் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலளிக்க நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம் என அமெரிக்காவின் உயரதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து ஈரான் தனது சிறிய ரக போர் விமானம், போர்க்கப்பல்களை அமெரிக்காவை நோக்கி திருப்பியது.

மே 8 - மேலும் தடைகள்:

அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சில உறுதிப்பாடுகளைத் தடுக்கும் முடிவின் ஒரு பகுதியாக செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் கனரக நீர் உற்பத்தியை அதிகரிக்க ஈரான் தயாராகி வருவதாக மே 8 அன்று கூறியது.

இந்த ஒப்பந்தத்திலிருந்து வாஷிங்டன் விலகிய ஒரு வருடம் கழித்து, தெஹ்ரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்த பின்னர், ஈரானின் எஃகு மற்றும் சுரங்கத் துறைகளுக்கு எதிராக புதிய நடவடிக்கைகளை ட்ரம்ப் அறிவித்தார்.

சவுதி எண்ணெய் கப்பல்
சவுதி எண்ணெய் கப்பல்

ஈரான் மீது அமெரிக்கா - சவுதி குற்றச்சாட்டு:

எண்ணெய் போக்குவரத்து ஆதாரமாக உள்ள ஹோர்முஸ் நீரிணைப்பு பகுதியை மூடப்போவதாக மே மாதத்தின் தொடக்கத்தில் ஈரான் அறிவித்திருந்தது.

இதையடுத்து மே 12 அன்று 2 எண்ணெய் கப்பல்கள் உட்பட 4 கப்பல்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. அந்தக் கப்பல்கள் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதல் பின்னணியில் ஈரான் சதி நடந்துள்ளதாக சவுதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது.

அடுத்த 2 நாட்களியே சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள இரண்டு முக்கிய பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் உள்ள கச்சா எண்ணெய் குழாய்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் வெடிமருந்து நிரப்பிய ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த ஷியா பிரிவை சேர்ந்த ஹெளதிக்கள் கிளர்ச்சி படை செய்ததாகவும், அந்த படைக்கு ஈரான் ஆதரவு அளித்ததாகவும் அமெரிக்காவும், சவுதியும் குற்றம் சாட்டின.

மே 19 : “அமெரிக்காவுடன் போரிட விரும்பினால், ஈரானுக்கு அழிவுதான்” - மிரட்டும் ட்ரம்ப்

ஈரான் தனது சிறிய ரக போர் விமானம், போர்க்கப்பல்களை அமெரிக்காவைத் நோக்கித் திரும்பியதாக செய்திகள் வெளியாகின.

இந்த செய்திக்குப் பிறகு மே 19-ந் தேதி அமெரிக்கா அதிபர் ட்விட்டர் பக்கத்தில், “ஈரான் எங்களுடன் போரிட விரும்பினால், ஈரான் அதோடு முடிந்து விடும். அதுவே அந்நாட்டின் அதிகாரப்பூர்வ முடிவாக இருக்கும். அவர்கள் மீண்டும் அமெரிக்காவை அச்சுறுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

ஜூன் 19 : ஈரானில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் - சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்!

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பகுதியில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.

ஜூன் - 21 : பின்வாங்கிய அமெரிக்கா!

அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் பறந்ததை அடுத்து அந்த விமானத்தை ஈரான் காவல்படையினர் சுட்டு வீழ்த்தினார்கள்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக இராணுவ தாக்குதல் நடத்த முடிவு செய்ததாகவும், அதனையடுத்து, ஈரானின் ஏவுகணைகள், கண்காணிப்பு ரேடார்கள் ஆகியவற்றை குறிவைத்து ராணுவ தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும், இந்தத் தாக்குதலுக்கு டொனால்டு ட்ரம்ப்பும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

அதன் பின் இராணுவ அதிகாரிகள் தாக்குதலுக்குத் தயாரான நிலையில், ட்ரம்ப் திடீரென தாக்குதல் நடத்தவேண்டாம் என்று பின்வாங்கியதாகவும் செய்திகள் வெளிவந்தன.

ஜூலை 1 : யுரேனியம் உற்பத்தியை அதிகரித்த ஈரான்:

அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தியை பத்து மடங்காக அதிகரிக்க முடிவு செய்திருப்பதாக ஈரான் அரசு தெரிவித்தது.

சூப்பர் டேங்கர் கிரேஸ் 1
சூப்பர் டேங்கர் கிரேஸ் 1

ஜூலை 4 : ஈரானை வம்புக்கிழுத்த இங்கிலாந்து!

ஈரான் நாட்டில் இருந்து ‘சூப்பர் டேங்கர் கிரேஸ் 1’ என்ற மிகப்பெரிய எண்ணெய் கப்பல் சிரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்தக் கப்பல் ஜிப்ரால்டர் ஜலசந்தியில் இங்கிலாந்து கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டது.

ஈரான் அரசு ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் ஒப்பந்தத்தை மீறி சிரியாவிற்கு எண்ணெய் ஏற்றியதால் சிறைபிடித்ததாக இங்கிலாந்து கூறுகிறது.

ஜூலை 19 : ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்!

ஓமன் வளைகுடாவில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நார்வே நாட்டின் எண்ணெய்க் கப்பல் தீ பிடித்து எரிந்தது. ‘கொக்குகா கரேஜியஸ்’ என்ற 2 எண்ணெய் கப்பல் பலத்த சேதம் அடைந்தது.

இதற்கும் ஈரான்தான் காரணமாக இருக்கவேண்டும் என்றும் ஈரான் ராணுவ வீரர்கள், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஒரு படகில் சென்று ஜப்பானின் எண்ணெய் கப்பல் அருகே ‘லிம்பெட்’ வகை கடல் கண்ணிவெடிகளை எடுக்கும் வீடியோவையும் அமெரிக்கா வெளியிட்டது.

ஈரான் – அமெரிக்கா மோதல் தொடங்கிய வரலாறு : ஈரான் இராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பின்னணி என்ன?
கொக்குகா கரேஜியஸ் என்ற எண்ணெய் கப்பல்

செப்டம்பர் 3 : ஈரான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மீது தடை!

ஈரானின் ‘ஈரான்ஸ் சிவிலியன் விண்வெளி நிறுவனம்’ மற்றும் இரண்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது.

டிசம்பர் 11 : ஈரானின் மிகப்பெரிய விமான நிறுவனத்திற்கு பொருளாதாரத் தடை!

அமெரிக்கா ஈரானின் மிகப்பெரிய விமான நிறுவனம் மற்றும் அதன் கப்பல் தொழில் துறையின் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது. அவர்கள் ஏமனுக்கு ஆபத்தான உதவிகளை கொண்டு சென்றதாக குற்றம் சாட்டியது.

டிசம்பர் 29 : ஈரான் எல்லைக்குள் அமெரிக்கா தாக்குதல்!

அமெரிக்க இராணுவம் ஈராக் மற்றும் சிரியாவில் ராணுத்திற்கு சொந்தமான ஹிஸ்புல் தளங்களில் "தற்காப்புத் தாக்குதல்களை" நடத்தியது.

இதில் ஹிஸ்புல் அமைப்பைச் சேர்ந்த 25 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஹிஸ்புல் படை ஆதரவாளர்கள் ஆஃப்கான் தலைநகர் காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் ஒருகட்டத்தில் வன்முறையாக மாற, போராடிய அவர்கள் அமெரிக்கத் தூரகத்தை சூறையாடினர்.

அமெரிக்கா ஈரானின் மிகப்பெரிய விமான நிறுவனம் மற்றும் அதன் கப்பல் தொழில் துறையின் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது. அவர்கள் ஏமனுக்கு ஆபத்தான உதவிகளை கொண்டு சென்றதாக குற்றம் சாட்டியது.

ஈரான் – அமெரிக்கா மோதல் தொடங்கிய வரலாறு : ஈரான் இராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பின்னணி என்ன?

டிசம்பர் 29 : ஈரான் எல்லைக்குள் அமெரிக்கா தாக்குதல்!

அமெரிக்க இராணுவம் ஈராக் மற்றும் சிரியாவில் ராணுத்திற்கு சொந்தமான ஹிஸ்புல் தளங்களில் "தற்காப்புத் தாக்குதல்களை" நடத்தியது.

இதில் ஹிஸ்புல் அமைப்பைச் சேர்ந்த 25 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஹிஸ்புல் படை ஆதரவாளர்கள் ஆஃப்கான் தலைநகர் காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் ஒருகட்டத்தில் வன்முறையாக மாற, போராடிய அவர்கள் அமெரிக்கத் தூரகத்தை சூறையாடினர்.

ஈரான் – அமெரிக்கா மோதல் தொடங்கிய வரலாறு : ஈரான் இராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பின்னணி என்ன?

ஜனவரி 01 - 2020 : பழிவாங்க காத்திருந்த அமெரிக்கா!

தூதரகத்தை சூறையாடியற்கு பழிவாங்க காத்திருந்தது அமெரிக்கா. ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி சிரியாவில் இருந்து விமானம் மூலம் ஈராக் தலைநகர் பாக்தாத் விமானநிலையம் சென்றார். அவரை, ஈராக்கில் இருக்கும் ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சிப் படையின் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸ் வரவேற்று காரில் அழைத்துச் சென்றார்.

ஈரான் – அமெரிக்கா மோதல் தொடங்கிய வரலாறு : ஈரான் இராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பின்னணி என்ன?

இந்தச் சமயத்தை சாதகமாக்கிக் கொண்ட அமெரிக்க ராணுவம், அவர்கள் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்தது. ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமானி உள்ளிட்டோர் சென்ற 2 கார்களின் மீது குண்டுகளை வீசினர். இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிப் பலியாகினர். மேலும் அபு மஹதியின் ஆதரவாளர்கள் 8 பேரும் உயிரிழந்தனர்.

ஈரான் – அமெரிக்கா மோதல் தொடங்கிய வரலாறு : ஈரான் இராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பின்னணி என்ன?

தற்போது அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்!

ஈரானில் நடத்திய தாக்குதலின் தொடர்ச்சியாக, வடக்கு பாக்தாத் பகுதியில் அமெரிக்க படைகள் வான் வழித் தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ராணுவத் தளபதி சுலைமானிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பேரணியாக செல்ல திட்டமிட்டு இருந்ததால், அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஈரான் – அமெரிக்கா மோதல் தொடங்கிய வரலாறு : ஈரான் இராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பின்னணி என்ன?

போர் பிரகடனத்தை அறிவித்த ஈரான் :

ஈரானில் ஷியா மதத் தலைநகரமாக கருதப்படும் கோம் நகரில் உள்ள புனித ஸ்தலமான ஜாம்கரண்(Jamkaran) மசூதியின் உச்சியில் செங்கொடி ஏற்றப்பட்டது. இது நவீன உலக வரலாற்றில் முன்னர் ஒருபோதும் நடந்ததில்லை. இது ரானில் ஷியா மதத்தவரின் போர்ப் பிரகடனமாகக் கருதப்படுகிறது.

அமெரிக்கா இழுத்துவிடப்பட இந்த வம்பினால் மூன்றாம் உலக போர் மூளும் அபாயம் உருவாகியுள்ளதாக உலக நாட்டு முக்கிய தலைவர்கள் கருதுகின்றனர்.

banner

Related Stories

Related Stories