அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஹன்னா வில்லியம்ஸ் என்ற சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் நேற்றைய தினம் போலீசார் வழிமறித்தபோது, அவர்களை நோக்கி போலி துப்பாக்கிகளை காட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த போலீசார் சிறுமியை சுட்டுதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் போது என்ன நடந்தது என கலிபோர்னியா காவல் துறை வீடியோ வெளியிட்டுள்ளது.
சிறுமி ஹன்னா வில்லியம்ஸ், மன அழுத்தத்தைப் போக்குவதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஹன்னா தனது வீட்டில் இருந்த காரை எடுத்துச் சென்று, அப்பகுதி சாலையில் வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளார். மேலும் அவர் போக்குவரத்து விதிகளையும் மீறி வாகனத்தை ஓட்டியதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
அவர் வேகமாக வாகனத்தை இயக்கியதால், சிறுமியைத் தடுத்து நிறுத்த அவரின் காரை துரத்தி பிடித்து போலீஸார் மடக்கியுள்ளனர். இதனால் ஹன்னா அச்சமையடைந்து காரில் இருந்த போலி துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி நீட்டியுள்ளார்.
ஹன்னா தாக்குதல் நடத்தப்போகிறார் என்று எண்ணிய போலீசார் சிறுமையை சுட்டுள்ளனர். இதில், ஹன்னாவின் மார்ப்பிலும், கால் பகுதியிலும் குண்டு பாய்ந்துள்ளது. சுடப்பட்டவுடன் ஹன்னா மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரை சோதனை மேற்கொள்ளும் போது அவர் வைத்திருந்தது போலி துப்பாக்கி என போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலிஸார் வெளியிட்டுள்ள வீடியோ தெளிவாக இல்லை.
இதையடுத்து ஹன்னா வில்லியம்ஸ் குடும்ப வழக்கறிஞர் ஒருவர் ஊடகத்திற்கு அளித்தப் பேட்டியின் போது, “ போலீசார் வெளியிட்டுள்ள வீடியோவை பார்க்கும்போது ஹன்னா போலீசாரை அச்சுறுத்தியதாக தெரியவில்லை. அவர் உதவிக் கேட்டுள்ளார். அதை தவறுதலாகப் புரிந்துகொண்ட போலிசார் பொறுமையைக் கடைபிடிக்காமல் ஏன் சுட்டார்கள் என்று புரியவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.