இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வரியில்லா வர்த்தக சலுகையைக் கடந்த ஜூன் 1-ம் தேதியோடு அமெரிக்கா அரசாங்கம் நிறுத்தியது. இதையடுத்து அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு சுங்க வரியை கடந்த 16ம் தேதி முதல் இந்தியா அதிகப்படுத்தியது. இந்நிலையில், அமெரிக்க பொருட்களுக்கு அதிகரித்த சுங்க வரியை திரும்பப் பெற பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''பிரதமர் மோடியைச் சந்திப்பதை எதிர்நோக்கியுள்ளேன். கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா அதிக வரிகளை விதித்துள்ளது. அண்மையில் மீண்டும் அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிக வரி விதிப்பைக் கண்டிப்பாக திரும்பப் பெற வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.