உலகம்

நிலாவும் செவ்வாய் கிரகமும் ஒன்னு - நாசாவுக்கு டிரம்ப் கொடுத்த அட்வைஸ்!

நிலவுக்கு செல்வதற்கான முயற்சியை நாசா கைவிடவேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டுவிட்டரில் கூறியுள்ளார்.

நிலாவும் செவ்வாய் கிரகமும் ஒன்னு - நாசாவுக்கு டிரம்ப் கொடுத்த அட்வைஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘“நாம் செலவு செய்யும் பணத்துக்கு நாசா இன்னமும் நிலவுக்குச் செல்லப்போவதாகப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. நாம் இதை 50 ஆண்டுகளுக்கு முன்னரே செய்துவிட்டோம். நாசா இன்னும் மிகப்பெரும் விஷயங்களான செவ்வாய் (இதன் ஒரு பகுதியான நிலவு), பாதுகாப்பு மற்றும் அறிவியல் மீது கவனம் செலுத்த வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

நிலவிற்கு செல்வதற்கான திட்டத்தை அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார். இந்நிலையில், நாசா அதிகாரி ஜிம் பிரிடன்ஸ்டைன் கடந்த வியாழன்று ’ட்ரம்ப் நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தினால் மட்டுமே 2024-ம் ஆண்டு நம்மால் நிலவில் கால்வைக்க முடியும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இவ்வாறு பதிவிட்டு உள்ளார். மேலும் அந்த பதிவில் நிலவை செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதி என குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க அதிபரின் கருத்தை நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories