உலகம்

மீண்டும் பதற்றம் : இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்!

இலங்கையில் மீண்டும் கலவரங்கள் வெடித்ததால் ஒருசில பகுதிகளில் சமூக வலைதளங்களை இலங்கை அரசு முடக்கியுள்ளது. 

மீண்டும் பதற்றம் : இலங்கையில் சமூக வலைதளங்கள்  முடக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தில் 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர விடுதிகள் என 8 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பம் பிறகு இரு மதத்தினரிடையே அவ்வப்போது மோதலாகவும் உருவாகிறது.

c vigil
c vigil

இந்நிலையில், இலங்கையில் கடற்ரை நகரமான சிலாவில் நேற்று முன்தினம் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், மசூதி, கடைகள் தாக்கப்பட்டன. இச்சம்பவத்தையடுத்து சிலாவ் நகரில் இன்று காலை வரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வதந்திகள் பரவுவதைத் தடுக்க ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற ஒருசில சமூக வலைதளங்களை இலங்கை அரசு முடக்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories