உத்தரபிரதேச மாநிலம், காசியபாத் மாவட்டத்திற்குட்பட்ட லோனி பகுதியைச் சேர்ந்தவர் அமீர்கான். இவர் பழ ஜூஸ் கடை ஒன்று வைத்துள்ளார். இவரது கடையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஜூசில் மஞ்சள் நிறத்தில் திரவம் போன்று ஒன்றை கலந்த கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து வாடிக்கையாளர்கள் கேட்டதற்கு மழுப்பலாக பதில் அளித்து வந்துள்ளார். பின்னர்தான் மஞ்சள் திரவம் போன்று இருந்தது சிறுநீர் என்று வாடிக்கையாளர்களுக்கு தெரியவந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அவரது கடை முன்பு குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு அங்கு வந்த போலிஸார் அவரது கடையில் ஆய்வு செய்தபோது பிளாஸ்டிக் கேனில் மனித சிறுர் சேமித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடையின் உரிமையாளர் அமீர்கானை கைது செய்தனர். மேலும் கடையில் வேலை பார்த்து வந்த சிறுவனிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூசில் சிறுநீர் கலந்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.