ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவதின் அவசியத்தை விளக்கி தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து போலிஸார் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு ஒரு கிலோ பூண்டு வழங்கி போக்குவரத்து காவல்துறையினர் விழப்புணர்வு ஏற்படுத்தினர்.
'பூண்டு இதயத்தை காக்கும் ஹெல்மெட் தலைமுறையைப் பாதுகாக்கும்' என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
அப்போது சாலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டிவந்தவர்களுக்குப் போக்குவரத்து போலிஸார் ஒரு கிலோ பூண்டை வழங்கினர். தற்போது பூண்டு கிலோ ரூ.600 க்கு விற்பனையாகி வரும் நிலையில் போக்குவரத்து போலிஸார் ஒரு கிலோ பூண்டை வழங்கியதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.