அன்றாட வாழ்க்கையில் அனைத்தும் இணையமயமாகி விட்ட காரணத்தினால், சில தேவைகளும் நமக்கு இணையம் மூலமே கிடைக்கிறது. அதில் முக்கியமாக விளங்குவது ஆன்லைன் ஷாப்பிங். இதன் மூலம் நாம் இருக்கும் இடத்தில் இருந்தே நமக்கு பிடித்தவற்றை ஆர்டர் செய்து நம்மால் பெற இயலும். இவ்வாறு ஆன்லைன் ஷாப்பிங்கில் முதன்மையாக திகழ்வது அமேசான் நிறுவனம்
உலகம் முழுவதும் இருக்கும் இந்த நிறுவனத்தின் பயனர்கள் இந்தியாவிலும் ஏராளம். ஆனால் அண்மைக்காலமாக ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு பதில் வேறு பொருட்கள் வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. லேப்டாப் ஆர்டர் செய்தார் பர்கர் என்றும், போன் ஆர்டர் செய்தால் பௌடர் டப்பா என்றும் பாலாவை வருகிறது.
அந்த வகையில் தற்போது இளைஞர் ஒருவர் ஆர்டர் செய்த பொருளுக்கு பதில் வேறு பொருள் வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யஷ் ஓஜா என்பவர் ரூ.19,900 மதிப்புள்ள சோனி XB910N என்ற ஒயர்லெஸ் ஹெட்போனை அமேசானில் ஆர்டர் செய்துள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து அவருக்கு பார்சல் வந்துள்ளது.
அதனை ஆர்வமாக வீடியோ எடுத்துக்கொண்டே திறந்துள்ளார். இறுதியாக ஹெட் போன் இருக்கும் பௌச் வந்தது. அதனை ஆவலாக திறந்து பார்க்கையில் அதில் சிறிய வடிவிலான டூத் பேஸ்ட் இருந்துள்ளது. இதனை கண்டு பெரும் அதிருப்தியடைந்த யஷ், இதுகுறித்து இணையத்தில் வீடியோ வெளியிட்டார். தொடர்ந்து இது அமேசான் நிர்வாகத்துக்கு தெரியவரவே, அவர்கள் இதற்கு வருத்தம் தெரிவித்ததோடு, இந்த விவகாரத்தை தீவிரமானதாக கருதுவதாகவும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தனர்.
இந்த சம்பவத்திற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் இவ்வாறு பலமுறை நடக்கிறது. எனவே இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பல்வேறு கருத்துகளையும் பெற்று வருகிறது.