ஜார்கண்ட் ஆளுநரின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வருபவர் குல்கர்னி. இவர் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானத்தில் சென்று கொண்டிருந்தார்.
இந்த விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கெண்டிருந்தபோது, விமானத்திலிருந்த 6 மாதக்குழுந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதைக் கவனித்த குல்கர்னி குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியும் ஈடுபட்டார்.
இவர் மருத்துவர் என்பதால் குழந்தைக்கு ஆக்சிஜன் கொடுக்கும் முயற்சியில் இறங்கினார். மேலும் இதே விமானத்தில் மருத்துவர் எம்.டிஃபிரோஸ் இருந்தார். பிறகு இவர்கள் இருவரம் ஒன்றாக இணைந்து விமானத்தையே சிறிது நேரம் மருத்துவமனையாக மாற்றிவிட்டனர்.
உடனே குழந்தைக்கு சி.ஆர்.பி உதவி செய்து உயிரைக் காப்பாற்றினர். இது குறித்து விமான நிலத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் டெல்லியில் தரையிறங்கியபோது அங்குத் தயாராக இருந்து மருத்துவர்கள் குழுவினர் குழந்தையைப் பரிசோதித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் குழந்தைக்கு எதுவும் ஆபத்து இல்லை எனவும் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து 6 மாத குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு மருத்துவர்களுக்கு சக பயணிகள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் இது தொடர்வான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் மருத்துவர்களுக்குப் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.