ஹைதராபாத்தில் ECIL என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உள்ள கேண்டீனில் தினமும் ஊழியர் பலரும் உணவு சாப்பிடுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 21ம் தேதி மதியம் ஊழியர் ஒருவர் உணவு சாப்பிட கேண்டீனுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு உணவு பரிமாறப்பட்டுள்ளது. உணவை அவர் சாப்பிட்டு வந்தபோது செத்துப் போன சிறிய பாம்பு அதிலிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து அவர் கேண்டீனில் இருந்து ஊழியர்களிடம் கேட்டபோது முறையாகப் பதில் எதுவும் சொல்ல வில்லை. இதையடுத்து உணவில் பாம்பு இருந்ததைப் புகைப்படம் எடுத்து சக ஊழியர்களுக்கு அனுப்பியுள்ளார்.
பிறகு ஊழியர்கள் பலரும் கேண்டீன் முன்பு கூடி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். மேலும் பாம்பு இருந்த உணவைச் சாப்பிட்ட ஊழியர்கள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும், இந்த சம்பவம் குறித்து புகார் எதுவும் செய்யப்படவில்லை என போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.