இந்திய அணியின் சிறந்த கேப்டனாக இருந்தது யார் என்று கேட்டால் உடனடியாக நினைவுக்கு வருபவர் மகேந்திர சிங் தோனிதான். இவர் தலைவனாகப் பதவியேற்ற பிறகுதான், இந்திய அணி மிகப்பெரிய உச்சத்திற்கு சென்றது. தோனியின் தலைமையில் இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என மூன்று விதமான போட்டிகளிலும் கோப்பை வென்றது. பின்னர் இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற தோனி ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்காகவே
இவருக்கு எந்த அளவிற்கு கிரிக்கெட் பிடிக்குமோ அதே அளவிற்கு பைக்குகள் மீதும் அதிக பிரியம் உண்டு. இவர் எங்குச் சென்றாலும் அங்கு இருசக்கர வாகனங்களை ஓட்டிப்பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் தனது வீட்டில் அனைத்து விதமான பைக்குகளையும் சேகரித்து வைத்துள்ளார். இதற்கு என்றே தனி இடத்தையும் உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தோனி சேகரித்து வைத்துள்ள பைக் மற்றும் கார்களின் வீடியோ ஒன்றைத் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.
அதில், "இப்படி ஒரு ஆர்வம் மிகுந்த மனிதரை நான் பார்த்ததேயில்லை. எத்தனை வகையான பைக்குகள். கார்கள். என்ன மாதிரியான நபர் இவர். ராஞ்சி வீட்டில் உள்ள தோனியின் பைக் கலெக்ஷன்கள் குறித்த வீயோ இது" என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.