காதலுக்கு வயது இல்லை என்பார்கள். அதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது அமெரிக்காவில் நடந்த சம்பவம் ஒன்று.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தாமஸ் மெக்மேகின், நான்சி கம்பேல். இவர்கள் இருவரும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் அப்போது இருவரும் காதலித்துள்ளனர். ஆனால் ஒருவருமே தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
பின்னர் பள்ளி முடித்து இருவரும் வெவ்வேறு கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதையடுத்து இவர்கள் பார்து பேசிக் கொள்வது நின்றுவிட்டது. பிறகு திருமணம் என குடும்ப வாழ்க்கைக்கு சென்றுவிட்டனர்.
இதையடுத்து பள்ளியில் படித்த மாணவர்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடியுள்ளனர். இந்த சந்திப்பில் மேக்மோகினும் நான்சி கம்பெலும் சந்தித்துள்ளனர். ஆனால் அப்போதும் இருவரும் சரியாகப் பேசிக்கொள்ளவில்லை. இதற்குக் காரணம் இருவரும் குடும்பம் இருந்ததால்.
பின்னர் மீண்டும் 10 ஆண்டுகள் கழித்து ரியூனியன் நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது இருவரும் சந்தித்தபோது இருவரும் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ்த்து வருவதைத் தெரிந்து கொண்டனர். இதனால் இருவரும் சேர்ந்து வாழலாம் என்ற எண்ணம் தோன்றி இருக்கிறது.
ஆனால் அங்கேயும் தங்கள் ஆசையை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த மெக்கேகின் தம்பா விமான நிலையத்தில் கம்பெல்லுக்கு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதை எதிர்பார்த்து காத்துக்கொன்டிருந்த அவரும் உடனே ஓகே சொல்லிவிட்டார். இந்த காதல் ஜோடிகளுக்கு விமான நிலையத்தில் இருந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.