வைரல்

90’S கிட்ஸ் பரிதாபம்.. திருமணத்திற்கு வரன் தேடி தரும்படி அரசுக்கு கோரிக்கை வைத்த வாலிபர்!

திருமணத்திற்கு வரன் தேடித் தரும்படி அரசுக்கு வாலிபர் ஒருவர் கோரிக்கை வைத்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.

90’S கிட்ஸ் பரிதாபம்.. திருமணத்திற்கு வரன் தேடி தரும்படி அரசுக்கு கோரிக்கை வைத்த வாலிபர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம், முரண்டரகி தாலுக்காவிற்குட்பட்ட தம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து ஹீகாரா. சொந்தமாக வியாபாரம் செய்து வரும் இவர் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கிறார்.

இவருக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். பல இடங்களில் பெண் தேடி பார்த்துள்ளனர். ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் அவருக்கு பெண் கிடைக்கவில்லை. இதனால் முத்து ஹீகாரா பெண் தேடி தேடி நொந்து போயுள்ளார்.

90’S கிட்ஸ் பரிதாபம்.. திருமணத்திற்கு வரன் தேடி தரும்படி அரசுக்கு கோரிக்கை வைத்த வாலிபர்!

இதையடுத்து கிராம பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தனக்கு திருமணத்திற்கு வரன்தேடி தரவேண்டும் என கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இந்த கோரிக்கை மனுவை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த கோரிக்கை மனுவில்," 28 வயதாகும் எனக்குக் கடந்த 2 ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் தேடி வந்தனர். ஆனால் எங்கும் வரன் கிடைக்கவில்லை. நான் மாதம் 50 ஆயிரம் சம்பாதித்து திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை.

எனவே அரசு எனக்கு வரன் தேடி தரவேண்டும். சாதி மதம் தடையில்லை. யாராக இருந்தாலும் நான் திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories