90'ஸ் கிட்ஸ்களின் பிடித்த ஒரு காமிக் என்றால் அதில் முதலில் இருப்பது 'ஹாரி பாட்டர்' தான். மாய உலகில் நடக்கும் விஷயங்களை இந்த படத்தில் காட்டியிருப்பார்கள். ஜெ.கே.ரெளலிங்க் கைவண்ணத்தில் உருவான இந்த கதை முதலில் நாவலாக தான் இருந்தது.
பின்னர் இதனை நாடக மேடையில் அரங்கேற்றினர். அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் இது வரவேற்பை பெற்றதால், இதனை படமாக எடுக்க திட்டமிட்டனர். அதன் படி இது படமாக்கப்பட்டது. தற்போது இருக்கும் உலகம் போன்று, வேறொரு இடத்தில் மாய உலகம் இருப்பதாகவும், அதில் நடக்கும் இன்னல்களை ஹீரோ எதிர்கொண்டு வில்லனை தோற்கடிப்பதும் கதையாக அமைந்துள்ளது.
மொத்தம் 7 பகுதிகளாக வெளியான நாவலை அப்படியே படமாக ஆக்கப்பட்டது. இதில் முதல் 2 பகுதிகளை கிரிஸ் கொலம்பஸ், 3-ம் பகுதியை அல்பான்ஸோ கெளரா, 4-ம் பகுதியை மைக் நெவல், 5-ல் இருந்து 8-ம் பகுதி வரை டேவிட் யாட்ஸ் என மொத்தம் 4 இயக்குநர்கள் இயக்குனர்.
8 பகுதிகளாக எடுக்கப்பட்ட இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 2011-ல் இப்படத்தின் முதல் பாகம் வெளியானாலும், இன்றளவும் இந்த படம் தலைசிறந்து காணப்படுகிறது. இந்த படத்தில் உள்ள கதாபாத்திரங்களும் நிலைத்து நிற்கிறது.
அதிலும் ஹாரி பாட்டராக நடித்திருக்கும் கதாநாயகன் Daniel Jacob Radcliffe பயன்படுத்திய கண்ணாடி வட்ட வடிவில் இருக்கும். இந்த படம் வந்த புதிதில் இது போன்ற கண்ணாடியை ரசிகர்கள் பொதுமக்கள் வாங்கி அணிந்து மகிழ்ந்தனர். மேலும் மேஜிக் குச்சி, பறக்கும் துடைப்பம் உள்ளிட்டவை மிகவும் பிரபலமாக திகழ்ந்தது.
இப்போதும் கூட நின்று பேசும் படமான இதற்கு ரசிகர்கள் உலகளவில் இருக்கின்றனர். இந்த நிலையில் இதன் முரட்டு ரசிகர்கள் தங்கள் திருமணத்தை ஹாரி பாட்டர் பட பாணியில் நடத்தியுள்ளனர். அதாவது கிரெய்க் மற்றும் கேத்தரின் என்ற ஜோடி இந்த ஹாரிபாட்டர் சீரிஸின் தீவிர ரசிகர்கள் ஆவர். இவர்கள் டேட்டிங்கில் இருக்கும்போதே ஹாரி பாட்டர் தொடர்பாகதான் கதை பேசி வந்துள்ளனர். மேலும் டாட்டூவும் குத்தி கொண்டதாக கூறப்படுகிறது.
இப்படி இருவரும் இதன் தீவிர ரசிகர்களாக இருப்பதால் தங்கள் திருமணத்தை ஹாரி பாட்டர் உலகத்தில் இருப்பது போலவே செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர். அதன்படி தங்கள் திருமண நிகழ்வு அன்று திருமணத்தை நடத்தி வைக்கும் பாதிரியாருக்கு டம்பிள்டோர் போல் வேடமணிந்து மணமக்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
அவர்களை சுற்றி deathly hallows போல் அலங்காரம் செய்யப்பட்டுள்து. மேலும் மணமக்களின் நண்பர்கள் மந்திரக்கோலை வைத்து ஆசிர்வாதம் செய்கின்றனர். அதோடு deathly hallows குறியீட்டின் முன்பு திருமணத்திற்கான உறுதி மொழியை எடுத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்த திருமணத்துக்கு அலங்காரம், உடை, சாப்பாடு, மது பார்ட்டி என இந்த தம்பதி, இந்திய மதிப்பில் ரூ. 20 லட்சம் செலவு செய்துள்ளனர். இதற்கு இணையத்தில் ஒரு கும்பல் விமர்சித்திருந்தால், மற்ற சிலர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டிலும் கூட ஹாரி பாட்டர் பட பாணியில் ஜோடி ஒன்று தங்கள் திருமணத்தை செய்துகொண்டனர். மேஜிக் தோப்பி, கோட், மந்திரக்கோல் உள்ளிட்டவை வைத்து அவர்கள் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் சில ஆண்டுகளுக்கு முன்னர் பல ஜோடிகளும் திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில், deathly hollows முறையில் முதல் முறையாக திருமணம் செய்துகொண்டுள்ளனர் கிரெய்க் - கேத்தரின் ஜோடி.