பொதுவாக இணையத்தில் பல வேடிக்கையான வீடியோக்கள் வைரலாகும். அதில் விலங்குகள், பறவைகள், மனிதர்கள் உள்ளிட்டோர் செய்யும் குறும்புகள், விபரீதீங்கள் என பல அடங்கும். அதுமட்டுமின்றி ஒரு மனிதனின் வித்தியாசமான கண்டுபிடிப்புகளும் இணையத்தில் வைரலாகும். இவ்வாறு வைரலாகும் அந்த வீடியோக்கள் மக்கள் மனதை வெகுவாக கவரும்.
இந்தியாவில் கூட பலரும் புதிய புதிய சிறு சிறு கண்டுபிடிப்புகள் செய்கின்றனர். அதில் குறிப்பாக வாகனங்கள் வைத்தும் கண்டுபிடிக்கின்றனர். கடந்த சில மதங்களுக்கு முன்னர் கூட மஹாராஷ்டிராவை சேர்ந்த ஒருவர் தனது பிள்ளைக்காக பழைய உதிரி பாகங்களை கொண்டு வரும் 60,000 ரூபாய் செலவில் ஜீப் ஒன்றை உருவாக்கியிருந்தார்.
இந்த ஜீப் உருவாக்கியவரை பாராட்டியதோடு, அவரது ஜீப்பை மஹிந்திரா நிறுவனம் வாங்கியுள்ளது. வாங்கிய அந்த ஜீப்பை அதன் ரிசர்ச் வேலியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு வெகுமதியாக ஜீப்பை உருவாக்கியவருக்கு மஹிந்திரா நிறுவனத்தின் சுமார் ரூ.9 லட்சமா மதிப்பிலான BOLERO ஜீப் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட பி.டெக் மாணவர் ஒருவர் கண்டுபிடிப்பான ரோபோ ஒன்று ரிக்சாவை இழுக்கும் வீடியோ வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. அந்த வகையில் தற்போது இளைஞர் ஒருவர் சதுர் வடிவிலான டயரை உருவாக்கி சைக்கிள் ஒன்றை ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்க்கிறது.
நம் அனைவர்க்கும் 'O' வடிவிலான (Round Shape) சைக்கிள் டயர்கள் தான் தெரியும். ஆனால் இந்த இளைஞரோ சதுர வடிவில் டயர் தயாரித்து ஓட்டுகிறார். அதாவது The Q என்ற யூடியூப் சேனல் ஒன்றில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த சேனலில் முழுக்க முழுக்க சைக்கிள், கார், கிட்டார் உள்ளிட்ட சில பொருட்கள் சார்ந்த விஷயங்கள் மட்டுமே உள்ளது. ஒரு சைக்கிளை வித்தியாசமான முறையில் கண்டுபிடித்தாலும் கூட ஓட்ட முடியும் என்பதை இந்த சேனலில் காட்டப்பட்டு வருகிறது.
6 நிமிடம் 52 நொடி இருக்கும் அந்த வீடியோவில், அந்த இளைஞர் வீடியோ கேம் விளையாடுகிறார். அப்போது அதில் ஒருவர் சதுர வடிவிலான டயர் உடைய காரை ஓட்டுகிறார். இதனை கண்டதும் இவருக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது. அதன்படி சதுர வடிவிலான டயரை உருவாக்க தேவையான பொருட்களை வாங்குகிறார். பின்னர் வீட்டிலேயே அந்த டயரை உருவாக்கி, தன்னிடம் இருக்கும் ஒரு சைக்கிளில் பொருத்தி அதனை ஓட்டுகிறார்.
7 நாட்களுக்கு முன்னர் வெளியான இந்த வீடியோ சுமார் 4.3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த வீடியோவுக்கு ஒரு பக்கம் வரவேற்பு இருந்தாலும், இதனை சிலர் கிண்டலடித்து வருகின்றனர். புது முயற்சிகளுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தும் வரும் நிலையில், இது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. முன்னதாக இந்த நபர் பந்துகளை வைத்து டயர் உருவாக்கி அதன் மூலம் சைக்கிள் ஓட்டுவது தொடர்பான வீடியோவும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.