எத்தனையோ காரணங்களால் நடக்க இருந்த திருமணங்கள் நின்று போனது பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். சிலர் நேரில் கூட பார்த்த அனுபவம் இருக்கும். ஆனால் 10 ரூபாய் நோட்டால் ஒரு திருமணம் நின்றது என்று எங்காவது நாம் கேள்விப்பட்டு இருப்போமா?. இப்படி ஒரு சம்பவம் தான் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஃபருக்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் ரீட்டா சிங். இவருடைய திருமண நிகழ்ச்சி பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அருகே இருந்த மணமகன் செயல்கள் வித்தியாசமாக இருந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த பெண்ணின் அண்ணன் இது குறித்து குடும்பத்தினரிடம் கேட்டுள்ளார். இதையடுத்து மணமகன் நன்றாக இருக்கிறாரா என்பதைச் சோதனை செய்து பார்ப்பதற்காக அவருக்கு மூன்று 10 ரூபாய் நோட்டுகள் கொடுத்து எண்ணச் சொல்லி இருக்கிறார்கள் பெண் வீட்டார்.
இதையடுத்து பணத்தைக் கையில் வாங்கிய பாப்பிள்ளை தட்டுத்தடுமாறி ஒரு வழியாக 10 ரூபாய் நோட்டை எண்ணி முடித்து ரூ.30 என கூறியுள்ளார். பின்னர் தான் மணமகனுக்கு உடலில் பிரச்சனை இருப்பது பெண் வீட்டாருக்கும், மணப்பெண்ணுக்கும் தெரியவந்தது.
பின்னர் அடுத்த நிமிடமே மணப்பெண் ரீட்டா சிங் அந்த பாப்பிள்ளை வேண்டாம் என கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் இரண்டு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிறகு ஒருவழியாக இருவரும் சமாதானம் ஆனபிறகு திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.
சமீபத்தில்தான் உத்தரகாண்ட மாநிலத்தில் விலை உயர்ந்த லெஹங்கா ஆடை வாங்கி தராததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி விநோதமான காரணங்களால் திருமணங்கள் நின்றுபோகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.