இணைய ஊடகம் அதிகரித்து விட்டதால் அடிக்கடி சில வீடியோக்கள் வைரலாகி வருகிறது. ஆனால் அந்த வீடியோவில் சொல்லப்படும் செய்திகள் உண்மைதான என்பதைப் பற்றி நாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் அதை அப்படியே நம்பி விடுவது மிகவும் ஆபத்தான ஒன்று என்பதை இந்த வீடியோ நமக்கு உணர்த்தி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு இந்துக் கடவுள் பிரம்மாவை பின்பற்றி தனது மகளை 62 வயது முதியவர் ஒருவர் திருமணம் செய்து கொண்டதாக வீடியோ ஒன்று வைரலானது. இந்த வீடியோவில் முதியவரும், இளம் பெண்ணும் மாலையுடன் இருக்கும் காட்சிகள் இருக்கும்.
இந்த வீடியோவை முதலில் Troll என்ற ட்விட்டர் கணக்கில் கடந்த டிசம்பவர் 25ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. மேலும் Techparesh என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிசம்பர் 17ம் தேதி இதே வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதேபோல் Paresh Sathaliya என்ற யூடியூப் பக்கத்திலும் இந்த வீடியோ உள்ளது.
அதுமட்டுமல்லாது Techparesh என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் பெண்ணை முதியவர் திருமணம் செய்வதுபோல், மூதாட்டி ஒருவர் இளைஞரைத் திருமணம் செய்துபோன்ற வீடியோவும், இரண்டு பெண்கள் ஒரு ஆணை திருமணம் செய்வது போன்ற வீடியோவும் உள்ளது. இப்படி திருமணம் தொடர்பான வீடியோக்கள் இந்தப்பக்கத்தில் அதிகம் உள்ளது.
இந்நிலையில்தான் தனது மகளையே முதியவர் ஒருவர் திருமணம் செய்வதுபோன்று இருக்கும் வீடியோ திட்டமிட்டு வைரல் செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் தனது மகளையே முதியவர் திருமணம் செய்வதாக வைரலாகும் வீடியோ போலியானது, இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பதும் நமக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.