வைரல்

“தயவுசெய்து இந்த விஷயத்தைக் கவனியுங்கள்” : ஒன்றிய அமைச்சரிடம் புலம்பிய ரயில்வே பாதுகாப்பு படை!

தீபாவளி பண்டிக்கையொட்டி போதிய சிறப்பு ரயில்கள் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

“தயவுசெய்து இந்த விஷயத்தைக் கவனியுங்கள்” : ஒன்றிய அமைச்சரிடம் புலம்பிய ரயில்வே பாதுகாப்பு படை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடு முழுவதும் தீபாவளி நாளை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த இரண்டு மூன்று நாட்களாக மக்கள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்வதால் ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் திரண்டு உள்ளனர்.

இதிலும் குறிப்பாக தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கையாக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கியதால் மக்கள் சிரமின்றி, சென்றுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் வட இந்தியாவில் உள்ள மாநிலங்களில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

“தயவுசெய்து இந்த விஷயத்தைக் கவனியுங்கள்” : ஒன்றிய அமைச்சரிடம் புலம்பிய ரயில்வே பாதுகாப்பு படை!

இதன்விளைவாக ரயில் நிலையங்கள் படையெடுத்த மக்கள் எப்படியாவது சொந்த ஊருக்குச் செல்வேண்டும் என முந்திக்கொண்டு ரயிலில் ஆபாத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பல இடங்களில் ரயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் பயணிக்கும் நிலை இருப்பதால், முன்பதிவு செய்வோர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

அந்தவகையில், ட்விட்டரில் ஒருவர் இந்தியன் ரயில்வே நிர்வாகத்தை டேக் செய்து வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவினேஷ் டவரி என்ற பத்திரிக்கையாளர் ஒருவர் நேற்றைய தினம் முன்பதிவு செய்து அவரது சொந்த ஊருக்கு பயணித்துள்ளார்.

“தயவுசெய்து இந்த விஷயத்தைக் கவனியுங்கள்” : ஒன்றிய அமைச்சரிடம் புலம்பிய ரயில்வே பாதுகாப்பு படை!

அப்போது கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் பயணிகளின் கூட்டத்தில் சிலர் முன்பதிவு செய்யாதவர்கள் முன்பதிவு செய்த பெட்டியை ஆக்கிரமித்து இருக்கையில் அமர்ந்துள்ளனர். பேசி அவர்களை எழுந்திருக்க செய்ய முடியாத நிலையில், இதுதொடர்பாக புகைப்படத்தும் புகார் ஒன்றை ரயில்வே நிர்வாகத்தின் ட்விட்டர் ஐடியை டேக் செய்து நியாயம் கேட்டுள்ளார்.

அதற்கு ரயில்வே நிர்வாகம் பதில் அளித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அவரின் பயணத்தை உறுதிபடுத்துவதாகவும் தெரிவித்திருந்தது. ஆனால் இதில் நடந்த மற்றொரு சம்பவம் என்னவெனில் வடக்கு ரயில்வே பாதுகாப்புப் படை அதேப்பதிவில், “தயவுசெய்து இந்த விஷயத்தைக் கவனியுங்கள்” என பதிவிட்டிருந்தது. அதேபோல், RPF NCR பாதுகாப்பு படையினரும் அதேபதிவை தெரிவித்திருந்தனர்.

ஒன்றிய அரசு பொதிய அளவில் சிறப்பு ரயில்கள் விடாததன் விளைவால் ஏற்பட்ட பிரச்சனைகளை, அதன் கீழ் செயல்படும் பாதுகாப்பு படையே உணர்ந்து இத்தகைய பதிவை வெளியிட்டுள்ளதாக பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றன.

மேலும் பாதுகாப்பாக பயணிகளை அனுப்பி வைக்கவேண்டிய ரயில்வே நிர்வாகமே தங்களின் மேலிடங்களில் இதுபோன்ற கோரிக்கைகள் மட்டுமே வைக்கப்படும் நிலையில் சமானிய மக்களின் நிலை என்னவாகும் என ட்விட்டரில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாது ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட kindly look in to the matter என்ற வாசகத்தை பலரும் பதிவிட்டு ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories