தற்போது டிஜிட்டல் யுகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். இந்த யுகத்தில் பணம் கூட டிஜிட்டல் வடிவில் மாற்றம் பெற்று நம் கைகளில் Google pay, Phonepe, amazon pay, என்று வளம் வருகிறது. இது போன்ற டிஜிட்டல் சாதனங்களின் வருகையால் பல நன்மைகள் இருந்தாலும் அதில் சில தீமைகளும் இருக்கவே செய்கிறது.
பல்வேறு ஆய்வுகளில் Google pay, Phonepe, amazon pay போன்ற செயலிகளை பயன்படுத்துவோர் ரொக்கமாக பணத்தை செலவு செய்வதை விட அதிகமாக செலவு செய்கிறார்கள் என கூறுகின்றன. சிறிது சிறிதாக செலவு செய்வதால் செலவு செய்யும் அளவு பெரியதாக தெரியாதது இதற்கு முக்கிய காரணமாகும்.
தற்போதைய சூழலில், பெட்டி கடை முதல் பெரிய கடைகள் வரை Google pay மூலம் பெறப்படும் பணத்தை வாங்கிவருகின்றன. இந்த நிலையில், மதுரையில் உணவகம் ஒன்றில் Google pay, Phonepe போன்ற செயலிகள் குறித்து வைக்கப்பட்டுள்ள பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பேனரில் "Google pay, Phonepe போன்ற செயலிகளின் வாயிலாக . பணப்பரிவர்த்தனை செய்து ஏதேனும் ஒரு பொருள் வாங்கவேர் உணவு வாங்கவோ நேரும்போது மனம் அதன் விலையைப் பற்றி பெரிதாக கவலைப்படுவதாகத் தெரியவில்லை . காரணம் இங்கு பணம் என்பது வெறும் எண்ணாக கணக்கு வைக்கப்படுகிறது. எண் குறைவதாலோ, கூடுவதாலோ பெரிதாக எந்த தாக்கமும் மனதிற்கு ஏற்படுவதில்லை.
அதுவே கையில் பணமாக வைத்திருக்கும் போது ஒரு ஐநூறு ரூபாயை மாற்றுவதற்கு நிறைய யோசிப்போம் இதனை மாற்றினால் உடனே தீர்ந்து போய்விடுமே என்றவாறு பண மேலாண்மையில் மனம் மிகுந்திருக்கும், பணத்தை சேமிக்கும் ஆசை வேண்டுமெனில் கத்தையாக பணத்தை கையில் தொட்டுப்பாருங்கள்" என்று கூறப்பட்டுள்ளது.