உலகம் முழுவதும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப புதுப்புது கார்கள் வந்து கொண்டே இருக்கிறது. மேலும் மின்சார கார்களும் முன்னணி கார் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.
மேலும் மாருதி, ஃபோர்டு, பி.எம். டபள்யூ, ஸ்கோடா , வோல்க்ஸ்வேகன் கார் போன்ற முன்னணி கார் நிறுவனங்கள் தங்களின் புதிய கார்களை தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைத்து வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக அறிமுகம் செய்து வருகிறது.
இந்நிலையில், பிரெஞ்சு நிறுவனமான சிட்ரன் தனது C3 காரை இந்தியாவில் ரூ.5.70 லட்சத்திற்கு அறிமுகம் செய்து முன்னணி நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும், feel, Live எனும் ட்ரிம்களில் 6 வேரியன்ட் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கார்களின் கலர் மற்றும் எஞ்சின்களின் தரங்களுக்கு ஏற்ப ரூ. 5.70 லட்சத்திலிருந்து ரூ.8.05 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில், டெல்லியில் உள்ள சிட்ரன் ஷோரூமில் இந்த கார்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் C5 காரை அறிமுகம் செய்துள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக C3 காரை அறிமுகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.