வைரல்

இளைஞர் வயிற்றில் இருந்த 233 நாணயங்கள், கற்கள்.. மருத்துவர்கள் அதிர்ச்சி: நடந்தது என்ன?

துருக்கியில் இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து 233 நாணயங்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் வயிற்றில் இருந்த 233 நாணயங்கள், கற்கள்.. மருத்துவர்கள் அதிர்ச்சி: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

துருக்கி நாட்டைச் சேர்ந்த 35 வயது இளைஞருக்கு சில நாட்களாக கடும் வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து ஸ்கேன் எடுத்துபார்த்தபோது இளைஞரின் வயிற்றுக்குள் நாணயங்கள், பேட்டரிகள், கற்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இளைஞர் வயிற்றில் இருந்த 233 நாணயங்கள், கற்கள்.. மருத்துவர்கள் அதிர்ச்சி: நடந்தது என்ன?

பின்னர் உடனே அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக்குழு முடிவு செய்துள்ளது. இதையடுத்து அவரது வயிற்றை அறுவை சிகிச்சை செய்தபோது அதில் 233 நாணயங்கள் இருந்தை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் வயிற்றில் இருந்த அனைத்து நாணயங்கள் மற்றும் நகங்கள், பேட்டரிகள், கற்கள் ஆகியவற்றையும் மருத்துவர்கள் பத்திரமாக வெளியே எடுத்துள்ளனர். தற்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த இளைஞர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் வயிற்றில் இருந்த 233 நாணயங்கள், கற்கள்.. மருத்துவர்கள் அதிர்ச்சி: நடந்தது என்ன?

இந்த அறுவை சிகிச்சை குறித்துப் பேசிய மருத்துவர் பெனிசி, "அறுவை சிகிச்சையின் போது ஒன்று அல்லது இரண்டு நகங்கள் நாங்கள் முதலில் பார்த்தோம். பிறகு வயிற்றுக்குள் இருந்த பெரிய குடலில் இரண்டு கற்கள் இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தோம்.

மேலும் பேட்டரிகள், நகங்கள், 233 நாணயங்கள் இருந்தை கண்டு நாங்கள் பீதியடைந்தோம். பிறகு அனைத்தையும் பத்திரமாக வயிற்றிலிருந்து வெளியே எடுத்தோம். பெரியவர்களுக்கு இந்த மாதிரியான நிலையை நாங்கள் இதுவரை பார்த்தது இல்லை.

இளைஞர் வயிற்றில் இருந்த 233 நாணயங்கள், கற்கள்.. மருத்துவர்கள் அதிர்ச்சி: நடந்தது என்ன?

பொதுவாகச் சிறுவர்கள், மனநோயாளிகள், சிறை கைதிகளில்தான் நாங்கள் இப்படிப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த இளைஞரின் வயிற்றுக்குள் இது எப்படி வந்தது என தெரியவில்லை" என தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த இளைஞர் வயிற்றுக்குள் நாணயங்கள், கற்கள், நகங்கள் எப்படிச் சென்று என தெரிவிக்கப்படவில்லை. இந்த செய்தி தற்போது துருக்கி நாட்டில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories