வைரல்

”எல்லாரும் சமம்தான டீச்சர்..” - சாதி வெறியை தூண்டி மூளை சலவை செய்த ஆசிரியரை வீட்டுக்கு அனுப்பிய மாணவன்!

சாதி வெறியை தூண்டும்விதமாக மாணவர்களிடம் பெண் ஆசிரியர் ஒருவர் பேசும் ஆடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”எல்லாரும் சமம்தான டீச்சர்..” - சாதி வெறியை தூண்டி மூளை சலவை செய்த ஆசிரியரை வீட்டுக்கு அனுப்பிய மாணவன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாணவர்களிடம் சாதி, மத வேறுபாடு இருக்கக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முயற்சிகள் ஏராளம். குறிப்பாக அண்மையில் பள்ளியில் சாதியை அடையாள படுத்தி காட்டப்படும் எந்த ஒரு விசயத்தையும் செய்யக்கூடாது, அணிகலன்களையும் அணியக்கூடாது என்று தமிழ்நாடு அரசு சார்பாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கலைச்செல்வி என்பவர் மாணவர் ஒருவரிடம் சாதியை ஊக்குவிக்கும் விதமாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொறுப்பு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவருக்கு செல்லக்கூடாது என ஆசிரியை கலைச்செல்வி, பள்ளியில் படிக்கும் மாணவரிடம் பேசியுள்ளார். மேலும் அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் எந்த ஒரு பதவிகளுக்கு வந்துவிடக்கூடாது. அதனால் உன்னுடைய சாதியை சேர்ந்த ஊர்காரர்களை அழைத்துகொண்டு பள்ளிக்கு வா என்று அந்த மாணவரை ஆசிரியர் தூண்டும் விதமாக பேசி இருக்கிறார்.

ஆனால் அந்த மாணவனோ, அனைவரும் சமம் என்றும், தனக்கு அனைவரையும் பிடிக்கும் என்றும் பதிலளித்துள்ளார். இருப்பினும் விடாத ஆசிரியை, அந்த மாணவனை மூளை சலவை செய்ய முற்பட்டுள்ளார். ஆனால் அந்த மாணவனோ, விடாமல் எல்லாரும் சமம் தான் டீச்சர் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், மாணவர்களிடம் சாதி ரீதியாக பேசிய ஆடியோ வெளியான விவகாரத்தில், கலைச்செல்வி மற்றும் மீனா ஆகிய இரு ஆசிரியைகளை சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் மாணவரின் பேச்சுக்கு பலரும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ஒரு அரசு பள்ளி ஆசிரியரின் செயல் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories