வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் தண்ணீர் தேடி, அல்லது பதுங்கி இருப்பதற்காக அவ்வப்போது பாம்புகள் குடியிருக்கும் வீட்டிற்குள் புகுந்து விடுகின்றன. இந்தநிலையில் கடலூர் மாவட்டத்தில் குடிருந்த வீட்டிற்குள் பாம்பு புகுந்துள்ளது. இதனைக் கண்ட வீட்டின் உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் தகவல் அறிந்து பாம்பைப் பிடிப்பதற்காக வனத் துறையினர் வந்துள்ளனர். அப்போது பாம்பைப் பார்த்து அந்த வீட்டில் இருந்த பெண் ஒருவர், “ வீட்டுக்குள் ஏன் வந்தாய்? நீ வரக்கூடாது என்று நாங்கள் சத்தியம் வாங்கியிருக்கிறோம், அதையும் மீறி நீ ஏன் வந்தாய்?” என சாமியாடிக் கொண்டே பல கேள்விகளைக் கேட்டு கூச்சலிட்டுள்ளார்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. பாம்போடு பேச்சுவார்த்தை நடத்தியை பார்த்ததும் வனத்துறையினர் செய்வதறியாது திகைத்து நின்றனர். பின்னர் வனத்துறையினர் படமெடுத்துக் ஆடிக்கொண்டிருந்த அந்த பாம்பைப் பிடித்து, பத்திரமாக மீட்டு மீண்டும் வனப்பகுதியிலே விட்டுவிட்டனர்.