வைரல்

பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் தொடரும் வேலையில்லா திண்டாட்டம்... ‘டீ’ விற்க வந்த பட்டதாரி இளம்பெண்!

பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் பட்டதாரி பெண் ஒருவர் டீ விற்பனை செய்து வரும் சம்பவம் வேலையில்லா திண்டாட்டத்தை அம்பலப்படுத்துவதாக அம்மாநில சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.

பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் தொடரும் வேலையில்லா திண்டாட்டம்... ‘டீ’ விற்க வந்த பட்டதாரி இளம்பெண்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா குப்தா. இளம்பெண்ணான இவர் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக பல இடங்களில் வேலை தேடியும் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கமால் இருந்துள்ளார். மேலும் அம்மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளையும் எழுதியுள்ளார். ஆனால் அதிலும் இடம் இடைக்காத நிலையில், வறுமை நிலைக்கு பிரியங்கா தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சுயமாக தொழில் தொடங்க முடிவெடுத்த பிரியங்கா, தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் பாட்னாவில் உள்ள மகளிர் கல்லூரி முன்பு தேநீர் கடை ஒன்றைத் தொடங்கியுள்ளார். மேலும் அந்த தேநீர் கடையில், மசாலா டீ, சாக்லேட் டீ என பலவகையான டீ விற்பனை செய்வதால் கல்லூரி மாணவிகள் அதிகளவில் கடைக்கு வருவதாகக் கூறப்படுகிறது.

பா.ஜ.க கூட்டணியின் கீழ் நடைபெறும் ஆட்சியில் பெண்களுக்கு படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காத நிலை உருவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories