வைரல்

விரைவில் YouTube-ல் அதிரடி மாற்றங்கள்.. Desktop பயனர்களுக்கு இனி ஜாலிதான் - புதிய அம்சங்கள் என்னென்ன?

YouTube shorts அம்சத்தை விரைவில் டெஸ்க்டாப், டேப்லெடிலும் அறிமுகம் செய்ய யூடியூப் திட்டமிட்டுள்ளது.

விரைவில் YouTube-ல் அதிரடி மாற்றங்கள்.. Desktop பயனர்களுக்கு இனி ஜாலிதான் - புதிய அம்சங்கள் என்னென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் YouTube-பை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சிலர் இதில் தங்களுக்கு என்று தனி சேனலை துவங்கி வருவாய் ஈட்டி வருகிறார்கள்.

2005ம் ஆண்டு Google நிறுவனத்தால் தொடங்கப்பட்ட YouTube, தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் சிறு சிறு மாற்றங்களை செய்து வருகிறது. ஸ்மார்ட் செல்போன்கள் அதிகரித்தை அடுத்து இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் போன்ற ஆப்புகள் மக்களை அதிகமாக கவர்த்துள்ளது.

தற்போது YouTube இதே தொழில்நுட்பத்தை கையில் எடுத்து YouTube shorts அண்மையில் அறிமுகம் செய்தது. இதை ஸ்மார்ட் போன்களில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், YouTube shorts அனைத்து தளங்களிலும் கொண்டு செல்ல வகையில் டெஸ்க்டாப் மற்றும் டேப்லெட்டு ஸ்மார் டிவிகளிலும் கொண்டு வர YouTube முடிவு செய்துள்ளது. அடுத்த சில வாரங்களிலேயே இது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், YouTube shorts தளத்தில் 'கட்' என்ற புதிய அம்சத்தையும் கொண்டு வரப்பட உள்ளது. இதில் பயனர்கள் தங்களின் வீடியோவில், மற்றவர்களின் வீடியோக்களையும் சேர்த்து கொள்ளும் வகையில் 'கட்' என்ற வசதி உருவாக்கப்பட்டுள்ளது. YouTube -ன் இத்தகைய மாற்றத்தால் அதன் பயனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories