வைரல்

“ரோடா இது..? எங்க வீட்டுக்கு யாருமே வர்றதில்ல” : நிருபராக மாறிய சிறுமி - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

காஷ்மீர் சிறுமி ஒருவர் தனது பகுதி சாலையின் அவல நிலை குறித்து நிருபர் போல பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“ரோடா இது..? எங்க வீட்டுக்கு யாருமே வர்றதில்ல” : நிருபராக மாறிய சிறுமி - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காஷ்மீரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பகுதியில் மோசமாக உள்ள சாலையின் அவலத்தை எடுத்துக் கூறும் விதமாக மைக் பிடித்து நிருபர் போல் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சிறுமி, சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நின்றுகொண்டு அந்த சாலையின் நிலை குறித்துப் பேசுகிறார். மேலும் அங்கு வசிக்கும் மக்கள் பொறுப்பின்றி குப்பைகளை இந்த சாலையில் வீசுவதையும் குறையாகக் கூறுகிறார்.

மேலும் சாலை இப்படி மோசமாக இருப்பதால் எங்கள் வீட்டிற்கு யாரும் வர மறுக்கிறார்கள் என்றும் சிறுமி வேதனையுடன் கூறுகிறார். இந்த வீடியோவில் சிறுமி ஒரு நிருபரைப் போல் ஒவ்வொரு குறைகளாக எடுத்துக் கூறி பேசியது அனைவரையும் கவர்ந்துள்ளது.

இதையடுத்து இந்த வீடியோ வேகமாக இணையத்தில் வைலாகி வருகிறது. சிறுமியின் இந்த வீடியோவை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளார். அதேபோல் விரைவில் சிறுமியின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories