வைரல்

“உறவினர் முன்னிலையில் அமர்ந்திருப்பது போல உணர்ந்தேன்” : முதல்வரை சந்தித்த காவலர் ராஜேஸ்வரி நெகிழ்ச்சி!

“முதல்வர் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது... ஒரு உறவினர் முன்னிலையில் அமர்ந்திருப்பது போல உணர்ந்தேன்” என்று காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி கூறி நெஞ்சம் நெகிழ்ந்துள்ளார்.

“உறவினர் முன்னிலையில் அமர்ந்திருப்பது போல உணர்ந்தேன்” : முதல்வரை சந்தித்த காவலர் ராஜேஸ்வரி நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை - டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை, நேற்று காலை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து மடல் பெற்றார்.

அந்நிகழ்வு குறித்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “முதல்வர் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது... ஒரு உறவினர் முன்னிலையில் அமர்ந்திருப்பது போல உணர்ந்தேன்” என்று கூறி நெஞ்சம் நெகிழ்ந்துள்ளார். காணொலியில் ஒளிபரப்பான அந்த வீடியோவில், ஆய்வாளர் ராஜேஸ்வரி குறிப்பிட்டதாவது:-

“இன்று காலை முதலமைச்சர் வீட்டுக்கு வருமாறு கூறினார்கள். சென்றேன். நல்ல ஒரு காஃபி கொடுத்தார்கள். குடித்தேன். என்னை உட்கார வைத்தார்கள். நல்ல முறையில் என்னை உபசரித்தார்கள். பிறகு முதலமைச்சர் அவர்கள், உள்ளே வருமாறு கூறினார்கள்.

வரச் சொல்லிவிட்டு, என்னை விசாரித்து விட்டு உட்காரச் சொன்னார்கள். உட்காரச் சொல்கிறார்களே, என்று தயக்கமாக இருந்தது. முதலமைச்சர் அவர்கள், “உட்காருங்கம்மா” என்றார்கள்.

உட்கார்ந்தேன். அப்புறம் என்னை விசாரித்தார்கள். என்னைப் பாராட்டினார்கள். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மிகுந்த மாண்புக்குரிய ஒரு முதலமைச்சர் முன்னால் உட்கார்ந்திருந்தது போலவே இல்லை. ஒரு உறவுக்காரர் முன்னால் அமர்ந்திருப்பது போல இருந்தது எனக்கு.

முதல்வர் அவர்கள், நல்லா - ஃப்ரீயா பேசினாங்க.. முதல்வரைப் பார்த்தால், ஒரு பயம் இருக்கும் இல்லையா! அந்த பயமே இல்லை. அந்த அளவிற்கு முதல்வர் முகத்தில் ஒரு பிரகாசம் இருந்தது. முதல்வர் தெளிவாகப் பேசினார்கள். அதனால் எனக்கு ரொம்ப, ரொம்ப சந்தோஷம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories