வைரல்

“எங்க கல்யாணத்த மழை வெள்ளம் தடுப்பதா..? நெவர்” : காதல் ஜோடி எடுத்த முடிவு - இணையத்தில் வைரல்!

வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மண்டபத்திற்கு செல்ல மணமக்கள் கையாண்ட வித்தியாசமான உத்தி, இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

“எங்க கல்யாணத்த மழை வெள்ளம் தடுப்பதா..? நெவர்” : காதல் ஜோடி எடுத்த முடிவு - இணையத்தில் வைரல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மண்டபத்திற்கு செல்ல மணமக்கள் கையாண்ட வித்தியாசமான உத்தி, இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஒரு முழு வீட்டையே சாய்க்கும் அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருமணம் போன்ற நிகழ்வுகளை நடத்துவதில் கேரள மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். ஆழப்புலா பகுதியை சேர்ந்த காதல் ஜோடி, வெள்ளம் அதிகமாக இருந்த காரணத்தால், திருமணத்தன்று கோயிலுக்குச் செல்ல முடியவில்லை.

பிறகு நீண்ட நேரம் யோசித்த அவர்கள் உணவு சமைக்கும் ராட்சத அலுமினிய பாத்திரத்தில் அமர்ந்து கோயிலுக்குச் சென்றுள்ளனர். பொதுவாக குதிரை வண்டி, கார் போன்றவற்றைத்தான், பெண் அழைப்புக்கு பயன்படுத்துவார்கள்.

ஆனால், மழை அதிகமாக இருந்த காரணத்தால், இவ்வாறு வித்தியாசமான முறையை கையாண்ட மணமக்களின் செயல் கவனம் ஈர்த்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகின்றன.

இதுகுறித்து மணமக்கள் கூறுகையில், “மழையை காரணம் காட்டி திருமணத்தை நிறுத்தவேண்டாம் என்று முடிவு எடுத்தோம். எனவே குறித்த தேதியில் திருமணத்தை நடத்திவிட்டோம்” என்று கூறியுள்ளனர்.

- கார்த்திகேயன்

banner

Related Stories

Related Stories