வைரல்

The Empire சீரிஸ் : மூக்கறுபட்ட சங்கிகள்; Hot Star செயலியை நீக்கச்சொல்லி ட்ரெண்ட் செய்யும் தேசபக்தர்கள்

பாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலியிடம் உதவி இயக்குநராக இருந்த மிதாக்ஷரா குமாரின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது The Empire வெப் சீரிஸ்.

The Empire சீரிஸ் : மூக்கறுபட்ட சங்கிகள்; Hot Star செயலியை நீக்கச்சொல்லி ட்ரெண்ட் செய்யும் தேசபக்தர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா அனைவருக்குமான நாடு என மக்களால் போற்றப்பட்டு வந்தாலும் தங்களுக்கென தனி உலகில் வாழும் ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களோ இந்தியா இந்துக்களுக்கானது எனக் கூறி பல்வேறு பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது.

ஆனால், அவை எதுவும் சாமானிய மக்களிடையே எடுபடவில்லை என்பதை அறிந்து தெரிந்தே அடுத்தடுத்து மூக்கறுபட்டு வருகின்றனர். அப்படி இருக்கையில், மக்களுக்கு எதிராக அரசு நிறைவேற்றும் திட்டங்களை விமர்சிக்கும் வகையிலான படைப்புகளோ அல்லது தங்களது சித்தாந்தங்களுக்கு எதிரான படைப்புகளோ வெளியானால் உடனே சமூக வலைதளங்களில் பொங்கி எழுந்து பெரும் பரபரப்பை கிளப்புவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

ஆனால், முடிவு என்னவோ அவ்வாறு விளம்பரத்துக்கு போராடும் சங்கிகளுக்கு எதிராகவே சென்று முடிவது வழக்கம். இந்நிலையில், பாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலியிடம் உதவி இயக்குநராக இருந்த மிதாக்ஷரா குமாரின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது The Empire வெப் சீரிஸ்.

The Empire சீரிஸ் : மூக்கறுபட்ட சங்கிகள்; Hot Star செயலியை நீக்கச்சொல்லி ட்ரெண்ட் செய்யும் தேசபக்தர்கள்

இது அலெக்ஸ் ரூதர்ஃபோர்ட் எழுதிய The empire of the mugahls எனும் நாவலை தழுவிய உருவாக்கப்பட்டதாகும். இதன் முதல் சீசன் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் இன்று வெளியாகி சினிமா ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது.

ஆனால் முகலாயர்களை பற்றிய கதையாக இருக்கும் இந்த வெப் சீரிஸை வெளியிட்ட ஹாட் ஸ்டார் தளத்துக்கு இது தொடர்பாக புகார்களையும் தேச பக்தர்கள் அளித்திருக்கின்றனர். ஆனால் அவை நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனையடுத்து எதிர்ப்பு தெரிவித்து #UninstallHotStar என்ற ஹேஷ்டேக்கை சங்கிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ட்ரெண்ட் மூலம் ஹாட் ஸ்டார் பயனாளர்களின் எண்ணிக்கையையே உயர்த்தியிருக்கிறார்கள் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, பாலிவுட் உச்ச நடிகையான கரீனா கபூர் தனது குழந்தைகளுக்கு முகலாய மன்னர்களான தைமூர் மற்றும் ஜெஹாங்கீரின் பெயர்களை வைத்ததற்கும் இதேப்போல சச்சரவுகளை கிளப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories