டிக்டாக் செயலி மூலம் சிறார்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருவதில் பலரும் பிரபலமடைவதோடு சிலருக்கு அரிய வாய்ப்புகளும் பல்வேறு துறைகளில் இருந்தும் தேடி வருகிறது.
மேலும் டிக்டாக்கில் வீடியோ பதிவிடுவதன் மூலமே பலர் வருமானத்தை ஈட்டி வருகின்றனர். அப்படி இருக்கையில் இத்தாலியில் வசித்து வரும் செனகல் நாட்டைச் சேர்ந்த கேபி லேம்-ஐ (Khaby Lame) என்ற இளைஞர் டிக்டாக்கில் 100 மில்லியன் பேர் பின் தொடர்வதாக Linked in தளத்தில் டிக் டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், ‘ஒரு வார்த்தையை கூட உதிர்க்காமல் மக்களை மகிழ்விக்கும் வகையில் தன்னுடைய கற்பனை வளத்தை உடல் பாவனைகளால் வெளிப்படுத்தி இந்த உயரத்தை எட்டியிருக்கிறார் கேபி. அவருக்கு வாழ்த்துகள்.’ எனக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக கேபி லேம் டிக்டாக்கில் மட்டுமல்லாது இதர சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றிலும் பிரபலமானவராகவே இருந்து வருகிறார். மேலும், டிக்டாக்கில் 100 மில்லியன் followers கொண்ட முதல் ஐரோப்பியாவைச் சேர்ந்தவராகவும், உலகிலேயே இரண்டாவது நபராகவும் கேபி லேம் அறியப்படுகிறார்.