வைரல்

சாதி, மதம், இனம் கடந்து உலகை இணைக்கும் ‘கிளிக்கி’ - மதன் கார்க்கியின் ‘பாகுபலி’ மொழி அறிமுகம்!

பாடலாசிரியரும், வசனகர்த்தாவுமான மதன் கார்க்கி உருவாக்கிய ‘கிளிக்கி’ மொழியை உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு இன்று இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி அறிமுகம் செய்தார்.

சாதி, மதம், இனம் கடந்து உலகை இணைக்கும் ‘கிளிக்கி’ - மதன் கார்க்கியின் ‘பாகுபலி’ மொழி அறிமுகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜமெளலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி’ படத்தில் இடம்பெற்ற காளகேயர்கள் பேசும் ‘கிளிக்கி’ மொழி உலகெங்கும் வெகுவாக வரவேற்பைப் பெற்றது. இந்த மொழி, அத்திரைப்படத்துக்கு வசனம் எழுதிய மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், உலக தாய் மொழி தினமான இன்று அந்த மொழியை ராஜமெளலியை வைத்தே அறிமுகப்படுத்தியுள்ளார் மதன் கார்க்கி. இந்த ‘கிளிக்கி’ மொழிக்கான எழுத்துகள் மற்றும் எண்களை கற்றுக்கொள்ள கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் லைஃபா நிறுவனத்தால் புதிதாக வடிவமைக்கப்பட்ட புதிய தளத்தையும் ராஜமெளலி வெளியிட்டார்.

சாதி, மதம், இனம் கடந்து உலகை இணைக்கும் ‘கிளிக்கி’ - மதன் கார்க்கியின் ‘பாகுபலி’ மொழி அறிமுகம்!

உலக மொழிகளின் எழுத்து வடிவங்களையும் அவற்றைக் கற்பதில் உள்ள சிரமங்களையும் ஆராய்ந்து கிளிக்கி மொழி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொழியின் எண்களை இரண்டு நிமிடத்தில் கற்க முடியும். ஒரு மணிநேரக் கற்றலின் மூலம் இந்த மொழியை எழுத மற்றும் படிக்கக் கற்றுக்கொள்ளலாம்.

ஆங்கிலம் கற்க 52 குறியீடுகளை ஒருவர் அறிய வேண்டும். கிளிக்கி மொழியை கற்க 22 குறியீடுகளை அறிந்தால் போதும். கிளிக்கி மொழியில் உள்ள உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் மற்றும் சிறப்பு சொடுக்கொலிகளை(clicks) எப்படி உச்சரிக்க வேண்டும் எழுத வேண்டும் என்பது காணொளி மூலம் இந்தத் தளத்தில் கற்பிக்கப்படுகிறது.

கிளிக்கி மொழியில் பாடல்களும், கதைகளும், இலக்கண நூல்களும் விரைவில் வெளிவரும். கிளிக்கி மொழி பயில்வோருக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுவரும் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம், சாதி, மதம், இனம், நாடு போன்ற எல்லைகளின்றி விரிந்து உலகை இணைக்கும் ஒரு மொழியாக கிளிக்கி மொழி இருக்கும் என்று நம்புகிறது. கிளிக்கி மொழியை பயில விரும்புவோர் www.kiliki.in என்ற இணைய தளத்தில் விலையின்றிக் கற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories