இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் நாளாவது நாளின்போது தோனி வருகை தந்தார்.
பின்னர் மைதானத்தில் இருந்து வெளியேவந்த தோனி பயன்படுத்திய வாகனம் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் உருவாகியுள்ளன.
பைக் மற்றும் கார்கள் மீது அதிக ஈடுபாடு கொண்ட தோனி இந்திய ராணுவத்துக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த நிசான் ஜோங்கா எஸ்.யூ.வி என்ற வாகனத்தை வாங்கியுள்ளார். இந்த வாகனம் பஞ்சாபில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ராணுவத்தினர் மட்டுமே பயன்படுத்தும் இந்த வாகனத்தை எப்படி தோனி பெற்றார் என பல கேள்விகளும் எழுந்த நிலையில், தோனியின் மகள் ஷிவாவுடன் அந்த காரை தோனி சுத்தம் செய்கிறார்.
இதுதொடர்பாக தோனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில், புதிதாக வாங்கிய அந்த ஜீப்பை தோனி சுத்தம் செய்ய, மகள் ஷிவாயும் உதவி செய்கிறார். மேலும், “இந்த சிறிய உதவி போதும்; பெரிய ஜீப் நீண்ட தூரம் பயணிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார் தோனி. அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.