உக்ரைன் நாட்டின் புதிய அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி. நடிகரும், திரைக்கதை எழுத்தாளருமான ஜெலன்ஸ்கி நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். இவர் நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.
உக்ரைன் நாட்டின் அதிபராகியிருக்கும் நிலையில் உலகத் தலைவர்களை கிண்டல் செய்யும் விதமாக அவர் பயன்படுத்திய விளக்கக்காட்சி (Presentation) தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
கடந்த செப்டம்பர் 12 முதல் 14ம் தேதி வரை நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கலந்துகொண்டு தனது விளக்கக்காட்சியை வெளியிட்டார்.
அதில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளை நகைச்சுவையாக கிண்டல் செய்துள்ளார் அவர்.
World Leaders Group எனும் பெயரில் போலியாக வாட்ஸ்-அப் குழு ஒன்றை உருவாக்கி, ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் ‘சாட்’ செய்வது போல சித்தரித்து சகலரையும் கலாய்த்துள்ளார் ஜெலன்ஸ்கி.
இதை அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வீடியோவாக எடுத்து, நண்பர்களுக்குப் பகிர, அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.