இந்தியாவிலிருந்து சிறிய வயதில் வழி தவறி பாகிஸ்தானுக்கு சென்ற பெண் கீதாவை, பாகிஸ்தானின் சம்ஜ்ஹூதா ரயிலில் நிலையத்தில் இருந்து மீட்டு அப்பகுதி மக்கள் அருகில் உள்ள பாதுகாப்பு முகாமில் சேர்த்தனர். தான் யார்? எப்படி இங்கு வந்தேன் என்கிற தகவல்களை சொல்ல முடியாததால், கடந்த 15 ஆண்டுகளாக இந்தியா திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தார் கீதா.
கேட்கவோ, பேசவோ முடியாத மாற்றுத்திறனாளி பெண் கீதா. அவரை எப்படியாவது அவரின் பூர்விகத்தைத் தெரிந்துக் கொண்டு, அங்கு அவரை கொண்டு சேர்க்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அது அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இறுதியில் அவர் இந்தியாவில் இருந்து தான் வந்திருக்க வேண்டும் என்கிற சந்தேகம் எழுந்தது.
இந்த தகவலை அடுத்து அவரை இந்தியாவிற்கு அழைத்து வரவேண்டும் என கோரிக்கை எழுந்தது. அந்த கோரிக்கைக்கு செவி சாய்த்த சுஷ்மா ஸ்வராஜ் 2015ம் ஆண்டு ஆக்டோபர் மாதம் அவரை இந்தியாவிற்கு அழைத்து வந்தார். இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டபோது அவருக்கு வயது 27. பின்னர் அவருக்கு கீதா என பெயரிடப்பட்டது.
அதன்பின்பு கீதா தன்னுடைய குழந்தைதான் என்று கூறி பெற்றோர் பலர் வந்தனர். அவர்கள் யாரையும் கீதாவிற்கு அடையாளம் தெரியவில்லை. பின்பு பல்வேறு முயற்சிகள் எடுத்தும் அவரின் பெற்றோர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்போது பேசிய சுஷ்மா ” கீதா இந்தியாவின் மகள். அவர் தனது குடும்பத்தினரைச் சந்திக்காவிட்டாலும், அவரை நாங்கள் ஒருபோதும் பாகிஸ்தானுக்கு அனுப்பமாட்டோம். இந்திய அரசு அவரை வளர்க்கும்” என உறுதி அளித்தார். மேலும் கீதாவுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகளையும் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீதாவிற்கு சுஷ்மா ஸ்வராஜ் மேல் அளவுக் கடந்த அன்பு உண்டு. அவரின் இறப்பு செய்திகேட்டு மன வேதனை அடைந்த சுஷ்மா, சைகை மொழி மூலம் அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். மிகவும் உருக்கமாக அமைந்துள்ள அந்த அஞ்சலி செலுத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.