ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி உலகளவில் பல பில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் வாட்ஸ்-அப் இல்லாமல் ஒரு நாளை கடப்பதை பெரும் சவாலாக உள்ளது. அதற்கு ஏற்றார் போல் பயனாளர்களுக்கு வசதியாகவும் பாதுகாப்பு அம்சங்களுக்காகவும் அவ்வப்போது அப்டேட்களை கொடுத்துவருகிறது வாட்ஸ்-அப் நிறுவனம்.
வாட்ஸ்-அப் செயலியை மொபைலில் மட்டுமின்றி கணினியிலும் பயன்படுத்த முடியும். நமது மொபைலை இண்டர்நெட்டுடன் இணைத்திருந்தால் தான் மட்டுமே இவ்வசதியை பயன்படுத்தமுடியும். இந்நிலையில், மொபைலில் இண்டர்நெட் வசதி இல்லாமலே கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்தும் வசதியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது வாட்ஸ்-அப் நிறுவனம்.
இதுகுறித்து தெரிவித்துள்ள WABetaInfo, வாட்ஸ்-அப் நிறுவனம் UNIVERSAL WINDOWS PLATFORM செயலியை NEW MULTI PLATFORM சிஸ்டத்துடன் இணைத்து பணியாற்றவுள்ளது. இதனால், உங்கள் செல்போன் ஸ்விட்ச்-ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் வாட்ஸ்-அப்பை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. ஆனால் இந்த வசதி எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கபடவில்லை. இந்த வசதி கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.